கேள்விக்குறியாகும் புவனேஷ்குமாரின் எதிர்காலம் - சுனில் கவாஸ்கர் கவலை
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரின் எதிர்காலம் குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் கடந்த இரண்டு வருடங்களாகவே சிறப்பாக பந்து வீச முடியாமல் திணறி வருகிறார். ஒவ்வொரு தொடரிலும் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டாலும் இழந்தை பார்மை மீட்க முடியாமல் உள்ளார்.
இதன் காரணமாக புவனேஸ்வர் குமாரை அணியில் இருந்து கழட்டிவிட்டு வேறு ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் புவனேஷ்வர் குமாரின் எதிர்காலம் எப்படி இருக்கும் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில் புவனேஸ்வர் குமார் தனக்கு கொடுத்த வாய்ப்பை எல்லாம் வீணடித்து விட்டார். என் மனதில் அவர் பெயர் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அவருடைய கிரிக்கெட் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை. எனவே அவர் மீண்டும் ஆரம்பத்திலிருந்து கடுமையாக பயிற்சி செய்ய வேண்டும் என கவாஸ்கர் கூறியுள்ளார்.
மேலும் இளம் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான தீபக் சஹாருக்கு தேர்வுக்குழு அதிக வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.