G20 விருந்து: இட்லி, சாம்பார், மசால் தோசை உள்பட 83 வகை சைவ உணவுகள்
இந்திய தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில், உலகத் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அளித்த விருந்தில் இட்லி, சாம்பார் உள்பட 83 இந்திய உணவு வகைகள் இடம் பெற்றிருந்தன.
இந்த மாநாட்டில், டெல்லி பாரத் மண்டபத்தில் உலகத் தலைவர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சிறப்பு அழைப்பாளர்களுக்கு இரவு விருந்து வழங்கப்பட்டது.
இந்திய ரொட்டி வகைகள்
ஜி20 விருந்தில் இந்திய ரொட்டி வகைகளான, மும்பை பாவ், வெங்காய பன், ஏலக்காய் ஸ்வீட் பிரட், தந்தூரி ரொட்டி, பட்டர் ரொட்டி, நான் குல்ச்சா, பிகானிர் தால் பரோட்டோ, மலபார் உருளை பரோட்டா ஆகியவை இடம் பெற்றிருந்தன
தால் வகைகள்
தால் வகைகளில் ஜோவார் தால் தட்கா, பஞ்சாப் தால், ராஜஸ்தானி தால் பாட்டி சுர்மா ஆகியவை இடம் பெற்றிருந்தன.
உள்ளூர் உணவு வகைகள்
உள்ளூர் உணவு வகைகளில் தஹி பல்லா, சமோசா, பேல்பூரி, வட பாவ், ஸ்பைசி சாட், வாட்டர் பேன்கேக், தயிர் பூரி, சேவ் பூரி, மிளகாய் வடை, பாலஸ், லீல்வா கச்சோரி, பொட்டட்டோ ஹார்ட் ஹேபி, திக்கி ஆகியவை இடம் பெற்றிருந்தன.
அரிசி உணவு வகைகள்
அரிசி உணவு வகைகளில் வெங்காய புலாவ், ஜோத்பூரி கபுலி புலாவ் ஆகியவையும், தென்னிந்திய உணவு வகைகளில் இட்லி சாம்பார், ஊத்தாப்பம், ஆனியன் ஊத்தப்பம், மசாலா தோசை, மைசூர் தோசை ஆகியவையும் இடம் பெற்றிருந்தன.
வெள்ளரி பச்சடி, புளி மற்றும் பேரீச்சம்பழ சட்னி, ஊறுகாய், தயிர் உள்பட சிறுதானிய உணவு வகைகளும் இடம் பெற்றிருந்தன.
இனிப்பு வகைகள்
இனிப்பு வகைகளில் ஜிலேபி, உத்தர பிரதேசத்தின் குட்டு மல்புவா, வால்நட், ஜிஞ்சர் புட்டிங், ரசமலாய், மலாய் கீவர், குலாப் சுர்மா, கம் புட்டிங, சேமியா பாயாசம், பாதாம் புட்டிங், மிஸ்ரி மாவா, கீர், கேரட் ஹல்வா, மோதி லட்டு, டிரை ப்ரூட் ஸ்வீட், வால்நட்-ஃபிக் புட்டிங், ஆங்கூரி ரசமலாய், ஆப்பிள் கிரம்பிள் பை, ஜோத்பூர் மாவா கச்சோரி ஆகியவை இடம் பெற்றிருந்தன.
ஜி20 உச்சி மாநாட்டில், உலகத் தலைவர்களுக்கு அளிக்கப்பட விருந்தானது, இந்திய பாரம்பரியம் மற்றும் உணவு வகைகளை வெளிநாடு தலைவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இருந்தது. மேலும், இந்த விருந்தில் சைவ உணவுகள் மட்டுமே இடம் பெற்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |