இலங்கையின் கடன் நெருக்கடியின் தீர்வை பெற்றுத்தர ஜி20 நாடுகளின் தலைவர்கள் இணக்கம்
ஜி 20 மாநாட்டில் இலங்கை, கானா போன்ற நாடுகளின் கடன் நெருக்கடி தீர்வை காண்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று தலைவர்கள் இணங்கியுள்ளனர் என வெள்ளை மாளிகை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஜி 20
உலகின் மிகப் பெரும் பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பான, ஜி - 20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதன் இரண்டு நாள் உச்சி மாநாடு புதுடில்லியில் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் இடம்பெற்றது.
இந்நிலையில் ஜி20 நாடுகள் அதிகாரபூர்வமான கடன் நிவாரணத்தை வழங்கவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகை
அறிக்கை இதன் மூலம் கடந்த வருடங்களில் தொடர்ச்சியாக எதிர்கொண்ட பொருளாதார அதிர்ச்சியிலிருந்து மீள முயலும் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகள் மீண்டும் தங்களை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் தங்களின் மிக முக்கியமான தேவைகளில் முதலீடு செய்ய முடியும் எனவும் பைடன் தெரிவித்துள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அத்தோடு, இலங்கை கானா போன்ற நாடுகளின் தொடரும் கடன் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான தங்களின் முயற்சிகளை இரட்டிப்பாக்குவதற்கு புதுடில்லியில் தலைவர்கள் தங்கள் அர்ப்பணிப்பை வெளியிட்டனர், உலக வங்கி சர்வதேச நாணயநிதியத்தின் கூட்டங்களில் அர்த்தபூர்வமான முன்னேற்றத்தை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி பைடன் தெரிவித்தார் எனவும் வெள்ளை மாளிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |