எல்லாத்துக்கும் ஒரு விலை இருக்கு .! தலிபான்களுக்கு பிரான்ஸ் வைத்துள்ள நிபந்தனைகள்
சர்வதேச அங்கீகாரம் பெற தலிபான்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மாக்ரோன் சில நிபந்தனைகளை பட்டியிலிட்டுள்ளார்.
செவ்வாயன்று பிரான்ஸ் இன்டர் வானொலி நிலையத்திற்கு அளித்த பேட்டியில், எதிர்வரும் ஜி-20 உச்சி மாநாடு ஆப்கானிஸ்தானின் தலிபான்களுக்கு சர்வதேச அங்கீகாரத்திற்கான நிபந்தனைகள் குறித்து ஒரு தெளிவான செய்தியை அனுப்ப வேண்டும் என்றார்.
அந்த நிபந்தனைகளில் பெண்களுக்கு சமத்துவம், வெளிநாட்டு மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான அணுகல் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாத குழுக்கள் உடனானா ஒத்துழையாமை ஆகியவை இருக்க வேண்டும்.
சர்வதேச அங்கீகாரத்திற்கு ஒரு விலை இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.
ஆப்கானிஸ்தான் பெண்களின் கௌரவம், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சமத்துவம் ஆகியவை நாம் வலியுறுத்தும் ஒரு முக்கிய புள்ளியாக மற்றும் நிபந்தனையாக இருக்க வேண்டும் என்று மாக்ரோன் கூறினார்.
இந்த மாத இறுதியில் ரோமில் நடைபெறவுள்ள ஜி-20 உச்சிமாநாட்டைக் குறிப்பிட்ட மாக்ரோன், இந்த மாநாட்டில் நாங்கள் ஆப்கானிஸ்தானைப் பற்றி பேசுவோம்.
ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள், சீனா, ரஷ்யா, ஆப்பிரிக்கா நாடுகள், ஆசியா, பசிபிக் மற்றும் லத்தீன் அமெரிக்கா என அனைவரும் ஒன்றாக இணைந்து, தாலிபான்களை அங்கீகரிப்பதற்கான நிபந்தனைகளை அமைப்போம் என்ற தெளிவான செய்தியை அவர்களுக்கு அனுப்ப வேண்டும் மாக்ரோன் கூறினார்.