இனி புல்லாங்குழல், வயலின் இசையில் மட்டுமே ஹாரன் - இந்தியாவில் வர உள்ள புதிய சட்டம்
வாகன ஹாரன்களாக இந்திய இசைக்கருவிகளின் ஒலிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வர உள்ளதாக மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இந்திய இசைக்கருவி ஒலிகளில் ஹாரன்
வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்த கூடாது என்ற சட்டம் இந்தியாவில் உள்ளது. இருந்தாலும், பலவேறு ஓட்டுநர்கள் இந்த ஹாரன்களை பயன்படுத்தி சாலைகளில் பயணிப்போருக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அனைத்து வாகனங்களிலும் ஹாரன்களிலும், புல்லாங்குழல், தபேலா, வயலின், ஹார்மோனியம் போன்ற இந்திய இசைக்கருவிகளிலிருந்து மட்டுமே ஒலிகளை உருவாக்க வேண்டும் சட்டத்தை பரிசீலித்து வருவதாக கூறியுள்ளார்.
இதன் மூலம், இனிமையான ஹாரன்களை கேட்க முடியும் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவின் காற்று மாசுபாட்டில் 40% போக்குவரத்துத் துறையால் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த, மெத்தனால், எத்தனால் உள்ளிட்ட பசுமை மற்றும் உயிரி எரிபொருளில் இயங்கும் வாகனங்களை பயன்படுத்த மோடி அரசு ஊக்குவித்து வருகிறது.
2014 ஆம் ஆண்டில், ரூ.14 லட்சம் கோடியாக இருந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களின் ஏற்றுமதி, தற்போது ரூ.22 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஜப்பானை முந்தி உலகளவில் மூன்றாவது பெரிய வாகன சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |