மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் எஞ்சின் சோதனை வெற்றி - இஸ்ரோ
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான எஞ்சின் சோதனை வெற்றி அடைந்துள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
சுகன்யான் திட்டம்
பூமியில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் மூன்று பேர் கொண்ட குழுவை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் தான் ககன்யான் திட்டம்.
அதாவது, அவர்களை 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் பாதுகாப்பாக பூமிக்கு கொண்டு வரும் இஸ்ரோவின் திட்டம் தான் இந்த ககன்யான் திட்டம். மேலும், இந்த ககன்யான் திட்டத்திற்காக LVM3 என்ற ராக்கெட் பயன்படுத்தப்படவுள்ளது.
எஞ்சின் சோதனை வெற்றி
தற்போது, ககன்யான் திட்டத்திற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் இஸ்ரோ அதற்கான எஞ்சின் சோதனை நடத்தியது.
திருநெல்வேலி மாவட்டம், காவல் கிணறு பகுதியில் உள்ள மகேந்திர கிரி விண்வெளி ஆய்வு மையத்தில் சி.20 கிரையோஜெனிக் எஞ்சின் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையானது 12 நிமிடங்கள் நடத்தப்பட்டதாகவும், சோதனை வெற்றி அடைந்ததாகவும் இஸ்ரோ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, சந்திரயான் -3 விண்கல திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து, ஆதித்யா எல்- 1 திட்டத்திற்கு இஸ்ரோ தயாராகி வருகிறது.
உலகப்பெரும் நாடுகளான சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மத்தியில் இந்தியா விண்வெளித்துறையில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |