விண்ணில் பாய 5 நொடிகள் இருந்த போது ககன்யான் சோதனை திடீரென நிறுத்தம்
ககன்யான் திட்ட மாதிரி விண்கலனை விண்ணில் ஏவும் சோதனை இன்று நடைபெற உள்ள நிலையில், அதன் சோதனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ககன்யான்
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் 2025 ஆம் ஆண்டு செயல்படுத்தப்படவுள்ளது. இதன் திட்ட பணிகளை இஸ்ரோ மிக தீவிரமாக செய்து வருகிறது. அதன்படி 3 கட்ட சோதனைகள் மேற்கொள்ள இருக்கிறது.
இந்நிலையில், ககன்யான் முதற்கட்ட சோதனையில் முதல் ஆளில்லா டிவி-டி1 ராக்கெட் இன்று காலை 8 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்தது. இதற்கான 13 மணிநேர கவுண்ட் டவுன் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது.
சோதனை ஒத்திவைப்பு
இதனிடையே, இன்று காலை 8 மணிக்கு மேற்கொள்ளப்படவிருந்த சோதனை அரைமணிநேரம் தாமதமாக 8.30 மணிக்கு மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ அறிவித்தது.
இந்நிலையில், விண்கலனை ராக்கெட் மூலம் ஏவுவதற்கான கவுண்ட் டவுன் நிறுத்தப்பட்டது. அதாவது, கவுண்ட் டவுன் நிறைவடைய 5 நொடிகள் இருந்த போது நிறுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அடுத்தகட்ட நகர்வு தெரிவிக்கப்படும் எனவும், ககன்யான் சோதனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனவும் எக்ஸ் தளத்தில் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மேலும், இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், "விண்கலம் பாதுகாப்பாக உள்ளது. அதில் நடந்த கோளாறு என்ன என்பது கண்டறியப்பட்டு விரைவில் விண்கலம் ஏவப்படும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |