வெளியேறுமாறு கட்டாயப்படுத்த முடியாது! CSK படுதோல்வி குறித்து பேசிய அணித்தலைவர்
லக்னோ அணியிடம் படுதோல்வியடைந்தது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் விளக்கம் அளித்துள்ளார்.
சேப்பாக்கத்தில் நேற்று நடந்த போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது.
இப்போட்டியில் CSK அணி நிர்ணயித்த 211 ஓட்டங்கள் இலக்கினை, மார்கஸ் ஸ்டோய்னிஸ் சதம் விளாசி எட்ட உதவினார்.
That 𝗧𝗢𝗡 𝗨𝗣 moment 💯
— IndianPremierLeague (@IPL) April 23, 2024
Ruturaj Gaikwad has graced Chennai with his graceful century 😍👌
Watch the match LIVE on @officialjiocinema and @StarSportsIndia 💻📱#TATAIPL | #CSKvLSG pic.twitter.com/eSAamjQcEs
தோல்விக்கு பின்னர் பேசிய அணித்தலைவர் ருதுராஜ் கெய்க்வாட், ''இந்த தோல்வி விழுங்குவதற்கு கடினமான மாத்திரை, ஆனால் இது ஒரு நல்ல கிரிக்கெட். இறுதிக்கட்டத்தில் LSG அணி சிறப்பாக விளையாடியது. நாங்கள் 13-14 ஓவர்கள் வரை ஆட்டத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம்.
ஆனால், ஸ்டோய்னிஸ் சிறப்பான இன்னிங்ஸ் விளையாடினார். பனி ஒரு காரணமாக அமைந்தது. அது எங்கள் சுழற்பந்து வீச்சாளர்களை ஆட்டத்தில் இருந்து வெளியேற்றியது. விளையாட்டின் பகுதிகளை கட்டுப்படுத்த முடியாது.
துடுப்பாட்டத்திற்கு பிறகு வெளியேறும்படி நாங்கள் கட்டாயப்படுத்த முடியாது. உண்மையைக் கூறுவதென்றால், எங்கள் இலக்கு போதாது என்று நான் நினைத்தேன், எங்கள் பயிற்சி அமர்வுகளின்போது நாங்கள் பார்த்த பனியின் காரணமாக அது சமமாக இருந்தது. ஆனால் LSGயின் துடுப்பாட்ட விதம் அருமை'' என தெரிவித்தார்.
Innings Break!
— IndianPremierLeague (@IPL) April 23, 2024
Ruturaj Gaikwad leads from the front with a TON as @ChennaiIPL reach 210/4 🙌
Can #LSG chase this down?
Follow the Match ▶️ https://t.co/MWcsF5FGoc#TATAIPL | #CSKvLSG pic.twitter.com/IiOvwuWVtq
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |