கடைசி ஓவரில் களமிறங்கி ருத்ர தாண்டவம் ஆடிய தோனி! சரவெடியாய் வெடித்த கெய்க்வாட்..வாணவேடிக்கை வீடியோ
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் 31 பந்துகளில் 57 ஓட்டங்கள் விளாசினார்.
CSK துடுப்பாட்டம்
ஐபிஎல் தொடரின் 6வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மோதி வருகின்றன. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னோ அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி சென்னை அணியில் கெய்க்வாட் மற்றும் கான்வே தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
Watching this guy @ Anbuden! 5⃣0⃣? #Bliss #CSKvLSG #WhistlePodu #Yellove ?? pic.twitter.com/SpWsQhJtsx
— Chennai Super Kings (@ChennaiIPL) April 3, 2023
ருதுராஜ் ருத்ர தாண்டவம்
இருவரும் சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டினர். அதிரடியில் மிரட்டிய இந்த கூட்டணி, முதல் விக்கெட்டுக்கு 110 ஓட்டங்கள் குவித்தது. மொத்தம் 4 சிக்ஸர்களை விளாசிய கெய்க்வாட் 31 பந்துகளில் 57 ஓட்டங்கள் எடுத்தார்.
அவரது விக்கெட்டு பிறகு கான்வே 29 பந்துகளில் 47 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகள் அடங்கும்.
The Quickfire Missile! ?⚡#CSKVLSG #WhistlePodu #Yellove ?? pic.twitter.com/0Z4CmO1oe3
— Chennai Super Kings (@ChennaiIPL) April 3, 2023
தோனி வாணவேடிக்கை
கடைசி ஓவரில் களமிறங்கிய எம்.எஸ்.தோனி அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டு மைதானத்தை அதிர வைத்தார். மேலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் 5000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை அவர் எட்டினார்.
MS Dhoni's two consecutive sixes tonight.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 3, 2023
This man's aura is unmatchable! pic.twitter.com/RwADVJl6Pb
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 217 ஓட்டங்கள் குவித்துள்ளது. லக்னோ அணியின் தரப்பில் மார்க் வுட் மற்றும் பிஸ்னோய் தலா 3 விக்கெட்டுகளும், ஆவேஷ் கான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
We’ve missed you, Anbuden! ✨#CSKvLSG #WhistlePodu #Yellove ?? pic.twitter.com/mzWwdgIrMk
— Chennai Super Kings (@ChennaiIPL) April 3, 2023
கடந்த போட்டியில் 50 பந்துகளில் 92 ஓட்டங்கள் விளாசிய கெய்க்வாட், தொடர்ச்சியாக இரண்டாவது அரைசதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Rutu-Way roaring left and right! ??#CSKvLSG #WhistlePodu #Yellove ?? pic.twitter.com/Ra80kig19U
— Chennai Super Kings (@ChennaiIPL) April 3, 2023