ஒரே ஆண்டில் 25,600 கோடி சொத்து சேர்த்த நபர்... தற்போதைய அவரது சொத்து மதிப்பு
கொல்கத்தாவை சேர்ந்த பெரும் தொழிலதிபரான ரவி மோடி ஊடக வெளிச்சத்தை அறவே தவிர்க்கும் நபர்களில் ஒருவர். தமது நிறுவனம் IPO பட்டியலில் வெற்றிகரமாக இடம்பெற்ற கொண்டாட்டங்களிலும் ரவி மோடி கலந்துகொள்ளவில்லை.
ஜவுளித்துறையில் கோலோச்சும் ரவி மோடி
ஆனால், 2022ல் அதிக சொத்து சேர்த்த கோட்டிஸ்வரர்கள் பட்டியலில் ரவி மோடியும் ஒருவர். ஜவுளித்துறையில் கோலோச்சும் ரவி மோடி, இந்திய பில்லியனர் தொழிலதிபர்களில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டு லாபம் ஈட்டிய ஆறாவது கோடீஸ்வரர் என்றே கூறப்படுகிறது.
முகேஷ் அம்பானி, கௌதம் அதானி, சைரஸ் பூனவல்லா மற்றும் ஃபல்குனி நாயர் ஆகியோரின் பட்டியலில் ரவி மோடியும் இணைந்துள்ளார். ஒரே ஆண்டில் 25,600 கோடி அளவுக்கு சொத்து சேர்த்துள்ளார்.
தமது தந்தையின் ஆயத்த ஆடைகள் கடையில் விற்பனையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார் ரவி மோடி. பின்னர் 2002ல் Vedant Fashions என்ற நிறுவனத்தை ரவி மோடி துவங்கியுள்ளார்.
இந்த நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 31,464 கோடி. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் தமது தொழிலில் பெயரெடுத்து வந்த ரவி மோடி, தனது லாபத்தில் இருந்து Mercedes-Benz சொகுசு கார் வாங்கலாம் என திட்டமிட்டு வந்துள்ளார்.
மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் 50வது இடம்
ஆனால் திடீர் திருப்பமாக, தமது லாபத்தையும் தமக்கு தெரிந்த தொழிலிலேயே முதலீடு செய்யும் முடிவுக்கு வந்துள்ளார் ரவி மோடி. Vedant Fashions என்ற நிறுவனத்தின் வெற்றிக்கும் அதுவே முதன்மை காரணமாகவும் கூறப்படுகிறது.
சுமார் 15 ஆண்டுகளுக்கு பின்னர், தமது கனவை நிறைவேற்றும் வகையில் ரவி மோடி Mercedes-Benz சொகுசு கார் வாங்கியுள்ளார். இந்தியா முழுக்க 600 கடைகளை திறந்துள்ளது Vedant Fashions நிறுவனம்.
இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் 50வது இடத்தில் உள்ளார் ரவி மோடி. இவரது தற்போதைய சொத்து மதிப்பு என்பது 27,370 கோடி என தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |