கொழும்பு கேப்ஸை காலி செய்த அசலங்காவின் காலி கல்லன்ட்ஸ்
பல்லேகேலேவில் நடந்த LPL 2026 போட்டியில், காலி கல்லன்ட்ஸ் அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொழும்பு கேப்சை வீழ்த்தியது.
சரித் அசலங்கா
கொழும்பு கேப்ஸ் மற்றும் காலி கல்லன்ட்ஸ் அணிகள் மோதிய LPL டி20 போட்டி பல்லேகேலேவில் நடந்தது.
முதலில் ஆடிய காலி கல்லன்ட்ஸ் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ஓட்டங்கள் குவித்தது. சரித் அசலங்கா 37 பந்துகளில் 58 ஓட்டங்கள் (2 சிக்ஸர், 7 பவுண்டரிகள்) விளாசினார்.
சஹன் அரச்சிகே 29 பந்துகளில் 43 ஓட்டங்களும், சாம் ஹார்பர் 16 பந்துகளில் 28 ஓட்டங்களும் விளாசினர். வனுஜா சஹன் 2 விக்கெட்டுகளும், முஜீப், மிலன், நீஷம் மற்றும் மல்ஷா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய கொழும்பு கேப்ஸ் 19.4 ஓவர்களில் 188 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. பென் மெக்டெர்மோட் 38 ஓட்டங்களும், சதீரா 37 ஓட்டங்களும், மல்ஷா தருபதி 36 ஓட்டங்களும் விளாசினர்.
மொஹம்மது நவாஸ் 3 விக்கெட்டுகளும், ஆகிஃப் ஜாவேத் மற்றும் இஷான் மலிங்கா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |