முதல் முறையாக மகுடம் சூடிய..தசுன் ஷானகாவின் காலி கல்லன்ட்ஸ்
LPL 2026 இறுதிப்போட்டியில் காலி கல்லன்ட்ஸ் வெற்றி பெற்று மகுடம் சூடியது.
ஜாஃப்னா கிங்ஸ் அணிக்கு எதிரான லங்கா பிரீமியர் லீக் இறுதிப் போட்டியில் காலி கல்லன்ட்ஸ் அணி வெற்றி பெற்று கிண்ணத்தை வென்றது.
LPL 2026 இறுதிப்போட்டி
கொழும்பில் நடந்த LPL 2026 இறுதிப்போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் மற்றும் காலி கல்லன்ட்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய ஜாஃப்னா கிங்ஸ் அணி 19.3 ஓவர்களில் 123 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. கமில் மிஷாரா 41 (32) ஓட்டங்களும், சமிந்து விக்ரமசிங்கே 24 (16) ஓட்டங்களும் எடுத்தனர். சரித் அசலங்கா, இஷான் மலிங்கா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய காலி கல்லன்ட்ஸ் அணியில் ஹார்பர் (1), அசலங்கா (2) ஆகியோர் சொதப்ப, தாமஸ் ஃப்ரேஸர் 34 ஓட்டங்கள் எடுத்தார்.
ஷானகா அதிரடி
தினுர கலுபஹன அதிரடியாக 19 பந்துகளில் 31 ஓட்டங்கள் விளாச, கருணாரத்னே 16 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
எனினும் சஹன் அரச்சிகே மற்றும் அணித்தலைவர் தசுன் ஷானகா 15.5வது ஓவரிலேயே அணியை வெற்றி பெற வைத்தார்.
ஷானகா (Shanaka) 9 பந்துகளில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 20 ஓட்டங்கள் விளாசினார். ட்ரவீன், ஷாகிப் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |