LPL 2024: கடைசி பந்தில் பவுண்டரி அடித்து காலே மார்வெல்ஸ் த்ரில் வெற்றி
ஜாஃப்னா கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் காலே மார்வெல்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
அவிஷ்கா-நிசங்கா அரைசதம்
LPL 2024 தொடரின் இரண்டாவது போட்டியில் Jaffna Kings மற்றும் Galle Marvels அணிகள் மோதின.
முதலில் ஆடிய Jaffna Kings அவிஷ்கா பெர்னாண்டோ (59), பதும் நிசங்கா (51) ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் 177 ஓட்டங்கள் குவித்தது. காலே தரப்பில் ஸஹூர் கான் 3 விக்கெட்டுகளும், உதானா மற்றும் பிரிட்டோரியஸ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
?Record Breaker! ?
— LPL - Lanka Premier League (@LPLT20) July 2, 2024
Avishka Fernando from Jaffna Kings hits his 15th half-century in the LPL, making him the only cricketer to achieve this milestone! ??
What a legend! Keep making history, Avishka! ??#LPL2024 #AvishkaFernando #JaffnaKings pic.twitter.com/ywwSESE6Et
அடுத்து களமிறங்கிய Galle Marvels அணியில் நிரோஷன் திக்வெல்லா 27 பந்துகளில் ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 47 ஓட்டங்கள் விளாசி வெளியேறினார்.
?Milestone Alert!?
— LPL - Lanka Premier League (@LPLT20) July 2, 2024
Pathum Nissanka reaches 52 before getting out! ? What an innings, and the hits just keep on coming! ??#LankaPremierLeague #LPLT20 #SriLankaCricket #SLC #CricketFever #T20Cricket #LPL2024 #LPL2024 #JaffnaKings pic.twitter.com/pdQSO7iWq6
ஹால்ஸ் 65
அலெக்ஸ் ஹால்ஸ் அதிரடியில் மிரட்ட, டிம் செய்பெர்ட் 10 ஓட்டங்களில் அவுட் ஆனார். அரைசதம் விளாசிய ஹால்ஸ் 47 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 65 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
? Power Blast Overs Complete! ?
— LPL - Lanka Premier League (@LPLT20) July 2, 2024
Galle Marvels score 28/1 in the Power Blast overs. Is this enough to seal the deal? They need just 20 more runs to chase the target! ??
Stay tuned for the thrilling finish!#LPL2024 #GalleMarvels pic.twitter.com/td11LHJrOT
பின்னர் வந்த பானுக ராஜபக்சே 13 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினர். கடைசி ஓவரில் காலே அணியின் வெற்றிக்கு 9 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
? Player of the Match! ?
— LPL - Lanka Premier League (@LPLT20) July 2, 2024
Alex Hales from Galle Marvels ? clinches the title with a stunning 65 runs off 47 balls! ?? What a performance!#LPL2024 #PlayerOfTheMatch pic.twitter.com/fiC2iyXaS8
2வது பந்தில் ஜனித் லியானகே பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தில் அவர் 25 ஓட்டங்களில் விக்கெட்டை இழந்தார். நான்காவது மற்றும் ஐந்தாவது பந்துகளில் காலே அணிக்கு இரண்டு ஓட்டங்கள் கிடைத்தது.
இதனால் கடைசி பந்தில் 3 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அசிதா பெர்னாண்டோ வீசிய பந்தை சஹன் அராச்சிகே பவுண்டரிக்கு விரட்டினார். இதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் Galle Marvels த்ரில் வெற்றி பெற்றது.
Marvels clinch victory by 5 wickets! ??
— LPL - Lanka Premier League (@LPLT20) July 2, 2024
A thrilling chase led by Alex Hales, Niroshan Dickwella, and Janith Liyanage seals the deal. What a game! ?#LankaPremierLeague #LPLT20 #SriLankaCricket #SLC #CricketFever #T20Cricket #LPL2024 pic.twitter.com/U2sdIUkXGm
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |