கால் உடைந்த நிலையிலும் பேட்டிங்: தலைமுறையாக நிலைத்து நிற்கும்..புகழ்ந்துதள்ளிய கம்பீர்
காயமடைந்த நிலையில் விளையாடிய ரிஷப் பண்டை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வெகுவாக பாராட்டியுள்ளார்.
காலில் படுகாயம்
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்டின் முதல் இன்னிஸில் ரிஷப் பண்டிற்கு காலில் படுகாயம் உண்டானது.
இதனால் 37 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் அவர் பாதியிலேயே வெளியேறினார்.
ஆனால், இந்திய அணி விக்கெட்டுகளை இழக்க எதிர்பாராத விதமாக மீண்டும் களத்திற்கு திரும்பிய பண்ட், உடைந்த காலுடன் பவுண்டரி, சிக்ஸர் விளாசி அரைசதம் அடித்தார்.
ரிஷப் பண்ட் (Rishabh Pant) 75 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணியின் ரசிகர்களும் அவரை பாராட்டினர்.
கவுதம் கம்பீர் பாராட்டு
இந்த நிலையில் பண்ட் குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறுகையில்,
"நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், இந்த அணியின் அடித்தளமான அவரது குணம், அவர் அணிக்காகவும் நாட்டிற்காகவும் செய்த ஒரு விடயத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்படும்.
இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்டில் கால் உடைந்த நிலையிலும் அணிக்காக விளையாடிய ரிஷப் பண்டை எவ்வளவு புகழ்ந்தாலும் அது போதாது.
கடந்த காலத்தில் பலர் இதைச் செய்ததில்லை. அவர் கையை உயர்த்தியிருந்தார்.
அதனால்தான் நான் அதைச் சொல்கிறேன். எவ்வளவு பாராட்டுக்கள் சொன்னாலும் போதாது. நான் இங்கே உட்கார்ந்து மணிக்கணக்கில் இதைப் பற்றிப் பேச முடியும். வருங்கால தலைமுறையினர் இதைப் பற்றிப் பேசுவார்கள் என்று நினைக்கிறேன்.
இவரின் இச்செயல் தலைமுறை தலைமுறையாக நிலைத்து நிற்கும்.
அவர் விரைவாக குணமடைந்து விரைவாக திரும்பி வருவார், மீண்டும் நமக்காக விளையாட முயற்சிப்பார் என்று நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |