இந்தியா கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு ISIS காஷ்மீர் கொலை மிரட்டல்
இந்தியா கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கவுதம் கம்பீர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர், ஓய்வு பெற்ற பிறகு பாஜகவில் இணைந்தார். 2021 நாடாளுமன்ற தேர்தலில், கிழக்கு டெல்லி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அவர், வெற்றி பெற்று எம்பியானார்.
இதனையடுத்து, இந்தியா கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு, கவுதம் கம்பீர் அந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
ISIS காஷ்மீர் கொலை மிரட்டல்
இந்நிலையில், ISIS காஷ்மீர் என்ற பயங்கரவாத அமைப்பில் இருந்து, கொலை மிரட்டல் விடுத்து, நேற்று மதியம் மற்றும் மாலை, 2 மின்னஞ்சல்கள் வந்ததுள்ளது.
உடனடியாக டெல்லி காவல்துறையை அணுகி, தனது குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்குமாறும், மிரட்டல் விடுத்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்குமாறும் புகார் அளித்துள்ளார்.
Praying for the families of the deceased. Those responsible for this will pay. India will strike. #Pahalgam
— Gautam Gambhir (@GautamGambhir) April 22, 2025
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருந்த கவுதம் கம்பீர், இதை செய்தவர்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்” எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, ISIS காஷ்மீர் அமைப்பில் இருந்து அவருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |