தோனியை சீண்டிய பிரபல வீரர்! ரோகித் சர்மா தான் கெத்து என்கிறார்
தோனியை வன்பிழுத்து சீண்டும் வகையில் ஒரு பதிலை கவுதம் கம்பீர் கொடுத்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீருக்கும், தோனிக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம் தான்.
தோனி பற்றி எதாவது சர்ச்சைக்குரிய வகையில் கம்பீர் அவ்வபோது பேசுவார். கவுதம் கம்பீரிடம் ஐபிஎல் தொடரில் சிறந்த கேப்டன் மற்றும் வீரர் யார் என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு கம்பீர் ரோகித் சர்மா தான் சிறந்த கேப்டன். கொல்கத்தா, மும்பை அணிகள் மோதும் போது, எனக்கு பல தூங்கா இரவுகளை பரிசளித்துவிட்டார். ரோகித் சர்மா போன்று எந்த கேப்டனும் எனக்கு நெருக்கடி தந்தது இல்லை.
சிறந்த வீரர் யார் என்ற கேள்விக்கும் என் பதில் ரோகித் சர்மா தான். கிறிஸ் கெயில், டிவில்லியர்ஸ் போன்ற வீரர்களை விட ரோகித் தான் சிறந்த வீரர். ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மாவை விட வெற்றிக்கரமான கேப்டன், வீரர் என்று யாருமில்லை என்று கவுதம் கம்பீர் பதில் அளித்துள்ளார்.
அதிக முறை மும்பை கோப்பையை வாங்கி இருந்தாலும், அதற்கு முன் அந்த பெருமையை பெற்ற அணி என்றால் அது தோனின் சிஎஸ்கே தான். தோனி மீதான வன்மத்தில் அவரது பெயரை கவுதம் கம்பீர் குறிப்பிடவே இல்லை.
இதனால் தோனியை வம்பிழுக்கும் நோக்கில் கம்பீர் பேசி வருவதாக ரசிகர்கள் சமூகவலைதளத்தில் கம்பீரை விமர்சித்துள்ளனர்.