Bigg boss 9: பணப்பெட்டியுடன் வெளியேறிய கானா வினோத்.., கிடைத்த மொத்த பணம் எவ்வளவு?
தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ்.
கடந்த ஆண்டு அக்டோபர் முதல் வாரம் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
கடந்த வாரம் கார் டாஸ்கில் சாண்ட்ராவை எட்டி உதைத்ததால், பார்வதி மற்றும் கம்ருதீன் இருவருக்கும் விஜய்சேதுபதி ரெட்கார்ட் கொடுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றினார்.

தற்போது பிக்பாஸ் வீட்டில் பணப்பெட்டி டாஸ்க் நடைபெற்று வருகின்ற நிலையில் போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுத்து அதில் வரும் பணத்தை அந்த பெட்டியில் போடப்பட்டது.
பிக்பாஸ் வீட்டில் கானா வினோத், சபரி, திவ்யா கணேஷ், சாண்ட்ரா, அரோரா, விக்ரமன் என ஆறு போட்டியாளர்கள் இருந்த நிலையில், கானா வினோத் பணப்பெட்டியுடன் வெளியேறியுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 9ன் டைட்டிலை வினோத் பெறுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், ரசிகர்களை ஏமாற்றும் வகையில் கானா வினோத் ரூ.18 லட்சம் ரூபாய் பணத்துடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.

அவருக்கு ஒரு நாளைக்கு 6 முதல் 8 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அவர் பிக்பாஸ் வீட்டில் 95 நாட்கள் இருந்துள்ளார்.
அதன்படி 95 நாட்கள் அவர் வீட்டில் இருந்ததால், 7 லட்சத்து 60 ஆயிரம் மற்றும் பணப்பெட்டியில் இருந்த 18 லட்சம் மொத்தமாக அவர் 25 லட்சத்தை வென்றுள்ளதாக கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |