விநாயகர் சதுர்த்திக்கு பூஜை செய்ய உகந்த நேரம் எது? விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
Spiritual
Fasting
Ganesha chaturthi
Vinayagar Chathurthi
By Kishanthini
Courtesy: oneindia
நமது வழிபாடுகள் எல்லாவற்றிற்கும் முன் நிற்கும் தெய்வம் பிள்ளையார்.
விநாயகர் சதுர்த்தி தினம் ஆண்டு தோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இந்தாண்டு ஆவணி 25ம் திகதியான நாளை வெள்ளிக்கிழமை, செப்டம்பர் மாதம் 10ம் தேதி கொண்டாடப்படுகிறது.
பூஜை செய்ய நல்ல நேரம்
- விநாயகர் சதுர்த்தி நாளில் விரதம் இருந்து பூஜை செய்து வழிபடலாம். கணபதியை வழிபட வெள்ளிக்கிழமையான நாளை நல்ல நேரம் உள்ளது.
- காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை கணபதி ஹோமம் செய்ய மிகவும் நல்ல நேரமாகும்.
- விநாயகர் பூஜை செய்ய காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரையும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரையும் நல்ல நேரம் உள்ளது.
கெளரி நல்ல நேரம் காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரையும் பகல் 1.00 மணி முதல் 1.30 மணி வரையும் நல்ல நேரமாகும்.
- இதே போல காலை 5.00 மணி முதல் 6.00 மணி வரையும் இரவு 09.30 மணி முதல் 10.30 மணி வரையும் பூஜை செய்யலாம்.
விரத எப்படி இருக்கலாம்?
- விநாயகர் சதுர்த்தி தினத்தன்று, காலையிலேயே எழுந்து, பூஜை அறையை அலங்காரம் செய்து, தீபமேற்றி விநாயகருக்கு மிகவும் பிடித்த வெள்ளெருக்கு மாலை, அருகம்புல் மாலை அணிவித்து, மனதார உங்களது விரதத்தை தொடங்கலாம்.
- முடிந்தவர்கள், எதுவுமே சாப்பிடாமல், சதுர்த்தி தினத்தன்று மாலை 6 மணி வரை, விரதம் இருக்கலாம். முடியாதவர்கள், வெறும் பால் பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.
- சாப்பிடாமல் இருக்க முடியாது என்பவர்கள் ல் மூன்று வேளையும் வயிறார உணவு சாப்பிட்டும் விநாயகர் வழிபாட்டை செய்யலாம். அதில் எந்த ஒரு தவறும் இல்லை.
- விநாயகர் சதுர்த்தி நாளில் விரதம் இருப்பவர்கள் சிலர் இருந்தாலும் கொழு கொழு பிள்ளையாருக்கு படைக்க பல வீடுகளில் கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, பழங்கள், வசதிக்கு ஏற்ப இனிப்புகள் என பட்சணங்களை தயார் செய்து படையல் போடலாம்.
விரதம் இருப்பதன் நன்மைகள் என்ன?
- திருமணத்தடை, குழந்தை பாக்கியம், சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இப்படிப்பட்ட தோஷ நிவர்த்திக்கு கூட சதுர்த்தி விரதம் நல்ல பலனை கொடுக்கும்.
- பிள்ளைகளின் படிப்பில் பிரச்சினை இருப்பவர்கள், பிள்ளைகளின் வாழ்க்கையில் பிரச்சினை உள்ளவர்கள் இந்த விநாயகர் சதுர்த்தி விரதத்தை மேற்கொண்டால், அவர்கள் வாழ்க்கையில் தெளிவு பிறக்கும்.
- பெற்றோர்களின் வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US