யானையை திருடி ரூ.27 லட்சத்துக்கு விற்ற மர்ம கும்பல்.., வலைவீசும் பொலிஸார்
மிகப்பெரிய யானையை திருடி ரூ.27 லட்சத்துக்கு விற்ற மர்ம கும்பலை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பொலிஸார் வலைவீச்சு
இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் மிகப்பெரிய யானையை திருடி விற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
இச்சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள மிர்சாபூரை சேர்ந்த நரேந்திர குமார் சுக்லா என்பவர் ஜெயமதி என்ற பெண் யானையை ரூ.40 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார்.
இந்த யானையை ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் இருந்து பணம் கொடுத்து வாங்கியுள்ள நிலையில், பலாமு மாவட்டத்தின் சுகூரில் யானையுடன் தங்கி இருந்தார் நரேந்திர குமார் சுக்லா.
ஆனால், இந்த யானை தற்போது காணாமல் போனதால் மேதினி நகர் காவல் நிலையத்தில் நரேந்திர குமார் புகார் அளித்துள்ளதன் பேரில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்
பின்னர், நரேந்திர குமாரின் யானையை பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு கும்பல் ஒன்று ரூ.27 லட்சத்துக்கு விற்றதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து, அங்கு சென்ற பொலிஸார் யானையை மீட்டதோடு திருடி சென்ற கும்பலை தேடி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |