பிரம்மாண்டமான சிவன் சிலையை சூழ்ந்துள்ள கங்கை வெள்ளம்.., வைரலாகும் வீடியோ
பிரம்மாண்டமான சிவன் சிலையை கனமழை வெள்ளம் சூழ்ந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் வீடியோ
இந்திய மாநிலமான உத்தராகாண்ட், உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தராலி என்ற மலைக்கிராமமானது கடல் மட்டத்தில் இருந்து 648 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
இந்த இடத்திற்கு பக்தர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் வந்து செல்வார்கள். மேலும், இங்கு ஹொட்டல்கள், தங்கும் விடுதிகள் ஆகியவை உள்ளது.
இந்நிலையில், நேற்று இப்பகுதியில் கனமழை பெய்ததால் கங்கா ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளமானது திடீரென தராலி மலைக்கிராமத்துக்குள் புகுந்தது.
இந்த வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். மேலும், அங்குள்ள விடுதிகள் மற்றும் ஹொட்டல்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
இந்நிலையில், ரிஷிகேஷி பிரமாண்ட சிவன் சிலையை சூழ்ந்து ஆர்ப்பரித்து ஓடும் வெள்ளத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
#Watch: ऋषिकेश से आज एक हैरान करने वाला नजारा देखने को मिला। लगातार हो ही बारिश और धराली में आई त्रासदी के बाद से गंगा नदी का पानी वहां मौजूद भगवान शिव की विशालकाय प्रतिमा के करीब पहुंच गया है। ऋषिकेश में गंगा खतरे के निशान के 340.50 आरएल मीटर के करीब पहुंच गई है।#Rishikesh… pic.twitter.com/lqU43HBcyS
— Hindustan (@Live_Hindustan) August 6, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |