T20 அணியின் தலைமை பயிற்சியாளராக கங்குலி நியமனம்
T20 அணி ஒன்றின் தலைமை பயிற்சியாளராக கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.
சவுரவ் கங்குலி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரான சவுரவ் கங்குலி, கடந்த 2008 ஆம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
அதன் பின்னர் ஐபிஎல் தொடரில், கொல்கத்தா மற்றும் புனே அணிகளுக்காக விளையாடினார்.
பின்னர், 2019 முதல் 2022 ஆம் ஆண்டு வரை பிசிசிஐ தலைவராக செயல்பட்டார்.
இந்நிலையில், தற்போது முதல்முறையாக T20 அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரிட்டோரியா கேபிடல்ஸ்
தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் SA20 தொடரின், பிரிட்டோரியா கேபிடல்ஸ் (Pretoria Capitals) அணிக்கு, கங்குலி தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்க வீரர் வெய்ன் பார்னெல் இந்த அணியின் அணித்தலைவராக செயல்பட்டு வருகிறார்.
முன்னதாக ஜொனாதன் ட்ரொட் இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். துணை பயிற்சியாளராக ஷான் பொல்லாக் நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பையை தளமாக கொண்டு இயங்கும் JSW குழுமம் இதன் உரிமையாளர் ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |