கோலியின் கருத்து குறித்து இறுதியாக மௌனம் கலைத்தார் கங்குலி!
ஒருநாள் கேப்டன் பதவி குறித்த கோலியின் கருத்து குறித்து இறுதியாக பிசிசிஐ தலைவர் கங்குலி மௌம் கலைத்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்னரே, உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு தான் இந்திய டி20 கேப்டன் பதவியிலிருந்து விலக போவதாக கோலி அறிவித்தார்.
அதேசமயம், ஒரு நாள் மற்றும் டெஸ்ட் அணி கேப்டனாக தொடர்ந்து செயல்படுவேன் என உறுதியளித்தார்.
கோலி டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகிய பின்னர், ரோகித் சர்மாவுக்கு அப்பொறுப்பு வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஒரு நாள் கேப்டன் பதவியிலிருந்தும் கோலியை நீக்கிய பிசிசிஐ மற்றும் அணித்தேர்வாளர்கள், அவருக்கு பதிலாக ரோகித்தை இந்திய ஒரு நாள் அணியின் கேப்டனாக நியமித்தனர்.
கோலியை ஒரு நாள் கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதற்கான காரணத்தை பிசிசிஐ வெளியிடாததால் பல சர்ச்சைகள் கிளம்பியது.
ரோகித்தை ஒரு நாள் கேப்டனாக நியமித்தது குறித்து விளக்கமளித்த பிசிசிஐ தலைவர் கங்குலி, டி20 கேப்டன் பதவியலிருந்து விலக வேண்டாம் என கோலிக்கு வேண்டுகோள் விடுத்ததாகவும், ஆனால், அவர் அதை ஏற்கவில்லை என கூறினார்.
மேலும், ஒரு நாள் மற்றும் டி20 அணிக்கு ஒரே கேப்டனை நியமிக்க தேர்வாளர்கள் குழு முடிவெடுத்ததாக கங்குலி விளக்கமளித்தார்.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த கோலி, டி20 கேப்டன் பதவியிலிருந்து விலக போவதாக நான் அறிவித்த போது, எந்தவித தயக்கமுமின்றி ஏற்றுக்கொண்டனர்.
ஒரே ஒரு முறை கூட நீங்கள் டி20 கேப்டன் பதவியிலிருந்த விலகக் கூடாது என யாரும் என்னிடம் கூறிவில்லை என உண்மையை உடைத்தார்.
டி20 கேப்டன் பதவியலிருந்து விலக வேண்டாம் என கோலிக்கு தான் வேண்டுகோள் விடுத்ததாக கங்குலி கூறியிருந்த நிலையில், கோலியின் இக்கருத்து மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கோலியின் கருத்து குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி மௌனம் கலைத்துள்ளார்.
கோலியின் செய்தியாளர் சந்திப்பை தொடர்ந்து முதன்முறையாக பேட்டியளித்த கங்குலி, இதுகுறித்து கருத்து தெரிவிக்க எதுவும் இல்லை. பிசிசிஐ அதை சரியான முறையில் கையாளும் என கூறியுள்ளார்.