நண்பன் என்று கூறி வீட்டுத்தோட்டத்தில் பிரித்தானிய தம்பதியர் வைத்திருந்த பொருள்: பொலிசார் குவிந்ததால் பரபரப்பு
அழகுப் பொருளாக கருதி, ஒரு பிரித்தானியத் தம்பதியர் தங்கள் வீட்டுத் தோட்டத்தில் ஒரு பொருளை பத்திரமாக வைத்திருந்தார்கள்.
ஆனால், திடீரென பொலிசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் வீட்டை சுற்றிவளைக்க, அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள் அவர்கள்.
நண்பன் என்று கூறி வீட்டுத்தோட்டத்தில் பிரித்தானிய தம்பதியர் வைத்திருந்த பொருள்
வேல்ஸிலுள்ள Pembrokeshire என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த Sian மற்றும் Jeffrey Edwards (77) என்னும் ஒரு தம்பதி, தங்கள் வீட்டுத் தோட்டத்தில், நீண்ட காலமாக, வெடிக்காத ஒரு வெடிகுண்டை அழகுப்பொருள் போல பத்திரமான வைத்திருந்திருக்கிறார்கள்.
JEFFREY EDWARDS
ஆனால், கடந்த புதன்கிழமை திடீரென பொலிசார் ஒருவர் வந்து வீட்டின் கதவைத் தட்டியுள்ளார். தம்பதியர் நினைப்பது போல அது அழகுப் பொருள் அல்ல, ஆபத்தான 19ஆம் நூற்றாண்டு கால வெடிகுண்டு என்று அவர் கூற, அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் தம்பதியர்.
வெடிகுண்டை செயலைழக்கவைத்த நிபுணர்கள்
சிறிது நேரத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் வந்து, அந்த வெடிகுண்டை பத்திரமாக எடுத்துச் சென்று, குவாரி ஒன்றில் வைத்து, மணல் மூட்டைகளை அடுக்கி பாதுகாப்பாக செயலிழக்கச் செய்துள்ளார்கள்.
JEFFREY EDWARDS
விடயம் என்னவென்றால், Sian தோட்ட வேலை முடிந்ததும், அந்த வெடிகுண்டின் மீது படிந்துள்ள மண்ணை டவலால் ஒரு அடி அடித்து சுத்தம் செய்வாராம்.
ஏதோ அதிர்ஷ்டம்தான் அந்த வெடிகுண்டு வெடிக்காமல் இருந்துள்ளது. தாங்கள் நீண்ட காலமாக அந்த வெடிகுண்டை தங்கள் வீட்டுத் தோட்டத்தில் வைத்திருந்ததாகவும், அதை ஒரு நண்பன் போல கருதி தாங்கள் பத்திரமாக வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்கள் தம்பதியர்.
JEFFREY EDWARDS
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |