இரத்த அழுத்தத்தை குறைக்கும் பூண்டு துவையல் - ஈஸியா செய்யலாம்
பூண்டு பயன்கள்
நாம் அன்றாடம் உணவில் பூண்டை சேர்ப்பதால், உணவில் சுவையை அதிகரிப்பதுடன், பல மருத்துவ குணங்களும் உள்ளது. பூண்டு சித்த வைத்தியலும் பயன்படுகிறது. பூண்டு, நம் உடலில் ட்ரிகிளிசரைடுகளை குறைப்பதால், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
மேலும், நம் உடலைத் தாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி பூண்டிற்கு உள்ளது. ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பவர்கள் தினமும் இரவு தூங்கச் செல்லும்போது, பூண்டை பசும்பாலில் கொதிக்க வைத்து, அந்த பூண்டு பாலை குடித்து வந்தால் இரத்த அழுத்தம் குறையும்.
சரி.... பூண்டு துவையல் எப்படி செய்யலாம்ன்னு பார்ப்போம் -
தேவையான பொருட்கள் -
பூண்டு - 30 பல்
காய்ந்த மிளகாய் - 8
புளி - தேவைக்கேற்ப
கடலைப் பருப்பு - ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் உரித்து வைத்த பூண்டை போட்டு பொன்னிறமாக வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு, கடலைப்பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர், கறிவேப்பிலையைப் போட்டு வாசனை போகும் வரை 2 நிமிடம் வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதன் பின்னர் காய்ந்த மிளகாயையும் போட்டு 2 நிமிடம் வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர், ஒரு மிக்ஸியில் வறுத்துவைத்த பூண்டு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, தேவைக்கு ஏற்ப புளி, உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து அரைக்கலாம்.
அம்மியில் அரைத்தால் இதன் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும்.
ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, கறிவேப்பிலை போட வேண்டும்.
இவை பொரிந்தவுடன் அரைத்து வைத்த பூண்டு விழுதை சேர்த்து இறக்க வேண்டும். சுவையான பூண்டு துவையல் ரெடி.
இந்த துவையலை சாதத்திலும் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க...