இட்லி, தோசைக்கு அருமையாக இருக்கும் பூண்டு சட்னி: இலகுவாக செய்வது எப்படி?
இந்த சுவையான பூண்டு சட்னி இட்லி, தோசை, சாதம் என அனைத்திற்கு அருமையாக இருக்கும்.
அந்தவகையில், சுவையான ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் பூண்டு சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பூண்டு - 100g
- மிளகாய் தூள்- 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- சிறிதளவு
- கரம் மசாலா- ½ ஸ்பூன்
- நல்லெண்ணெய்- சிறிதளவு
- கடுகு- ¼ ஸ்பூன்
- கறிவேப்பிலை- சிறிதளவு
- கொத்தமல்லி- சிறிதளவு
செய்முறை
முதலில் பூண்டின் தோலை உரித்து எடுத்து அதனை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து இதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
இதையடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
எண்ணெய் நன்கு பிரிந்து வரும் வரை வதக்கி இறுதியாக கொத்தமல்லி சேர்த்தால் போதும் சுவையான பூண்டு சட்னி ரெடி.
இதை இட்லி, தோசை, சாதம் போன்றவற்றிற்கு அருமையாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |