Garlic Naan: நாவூறும் சுவையில் பூண்டு நாண்.., வீட்டிலேயே தவாவில் செய்யலாம்
பலருக்கும் ஹொட்டலுக்கு சென்றால் நாண் ரொட்டி சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
வீட்டிலேயே தவாவில் இந்த வெண்ணெய் பூண்டு நாண் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ஈஸ்ட்- 1 ஸ்பூன்
- சர்க்கரை- 1 ஸ்பூன்
- மைதா- 2 கப்
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- வெண்ணெய்- 12 ஸ்பூன்
- பூண்டு- 3 பல்
- கொத்தமல்லி- சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் சேர்த்து அதில் சர்க்கரை சேர்த்து கலந்து பின் ஈஸ்ட் சேர்த்து 5 நிமிடம் அப்படியே விட்டால் ஈஸ்ட் நன்கு பொங்கி வரும்.
பின் ஒரு பாத்திரத்தில் மைதா சேர்த்து அதில் எண்ணெய், உப்பு சேர்த்து அதில் ஈஸ்ட் சேர்த்து பின் தண்ணீர் சேர்த்து மாவை நன்கு பிணைந்து கொள்ளவும்.
அடுத்து பிணைந்த மாவை 2 மணி நேரம் அப்படியே மூடி போட்டு வைக்கவும்.
இதனைத்தொடர்ந்து மாவை சிறிய உருண்டையாக எடுத்து அதனை நீள்வட்டமாக தேய்த்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு கிண்ணத்தில் உருக்கிய வெண்ணெய், நறுக்கிய பூண்டு மற்றும் கொத்தமல்லி சேர்த்து கலந்து அதனை மாவின் மீது தேய்க்கவும்.
இறுதியாக ஒரு தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்த மாவை போட்டு இரண்டு பக்கமும் சுட்டு எடுத்தால் சுவையான பூண்டு நாண் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |