கொத்து கொத்தா முடி கொட்டுதா? அடர்த்தியான முடிக்கு இந்த ஒரு எண்ணெய் போதும்
பலருக்கும் வழுக்கை, முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பிரச்சனைகள் காரணமாக முடி கொட்டி விடுகின்றன.
பொதுவாக முடி வளர்ப்பது என்பது தற்போது ஆண், பெண் என இருவருக்கும் இருக்கும் ஒரு ஆசைதான்.
அந்தவகையில், முடி உதிர்வை தடுத்து வேகமாக முடி வளர பூண்டு எண்ணெயை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
கூந்தலுக்கு பூண்டு எண்ணெய்
பூண்டு எண்ணெய் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் முடி உதிர்தலைக் குறைக்கவும் பயன்படுகிறது.
பூண்டு எண்ணெயில் கந்தகம், வைட்டமின் ஈ, வைட்டமின் சி, வைட்டமின் பி 6 மற்றும் வைட்டமின் பி 1 ஆகியவை உள்ளன.
இது முடி வேர்கள் மற்றும் மயிர்க்கால்களை வலுப்படுத்தவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
பயன்படுத்தும் முறை
1. பூண்டு எண்ணெயை சூடாக்கி, உச்சந்தலையில் மெதுவாக மசாஜ் செய்யுங்கள். இ
தற்கு பிறகு லேசான ஷாம்பூவுடன் கழுவுவதற்கு முன்பு குறைந்தது 30 நிமிடங்களுக்கு அதை விட்டு விடுங்கள்.
வாரம் ஒரு முறை இந்த பூண்டு எண்ணெய் தடவி வந்தால் தலைமுடி வலுவடைய உதவும்.
2. தேங்காய் எண்ணெயுடன் பூண்டு எண்ணெயை கலந்து, தலைமுடியில் வேர் முதல் நுனி வரை தடவுங்கள்.
குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் அல்லது இரவு முழுவதும் அதை விட்டு பின்னர் தலைமுடியை கழுவி விடுங்கள்.
அதேபோல தேன், ரோஸ்மேரி எண்ணெய், கற்றாழை ஜெல் அல்லது முட்டையில் பூண்டு எண்ணெய் சேர்த்து பயன்படுத்தலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |