Whoop-க்கு போட்டியாக Garmin-ன் புதிய திரை இல்லாத ஸ்மார்ட் பேண்ட்
Garmin நிறுவனம் தனது புதிய Cirqa Smart Band-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது Whoop போன்ற பிரபலமான fitness tracker-க்கு போட்டியாக வந்துள்ளது.
முக்கியமாக, Cirqa-வில் subscription கட்டணம் தேவையில்லை. ஒருமுறை வாங்கினால் அனைத்து அம்சங்களையும் பயன்படுத்தலாம்.
இந்த பேண்ட் திரை (screen) இல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 10 நாட்கள் வரை நீடிக்கும் battery life கொண்டது.

பயனர்கள் சேகரிக்கப்பட்ட தரவுகளை Garmin Connect app-இல் காணலாம். இதில் heart rate, Body Battery energy monitoring, Pulse Ox, stress, skin temperature போன்ற முக்கியமான biometrics தரவுகள் கிடைக்கும்.
மேலும், பெண்களின் health & cycle tracking வசதியும் உள்ளது. Cirqa-வில் திரை இல்லாவிட்டாலும், activity detection மற்றும் recording செய்யும்.
இந்த பேண்ட் citron gray, mauve, French gray, dark olive, captain blue, French blue, black போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
wrist band அல்லது arm band ஆக அணியலாம். இரண்டு அளவுகளில் (small/medium மற்றும் large/extra-large) கிடைக்கிறது.
Cirqa-வின் விலை 199.99 டொலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூலை 24, 2026 முதல் வாங்க கிடைக்கும். Subscription இல்லாததால், fitness tracking-க்கு எளிய, குறைந்த செலவிலான தீர்வாக இது பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |