ரொனால்டோவைப் போல் அந்தரத்தில் பறந்தபடி கோல் அடித்த வீரர்! வைரலான வீடியோ
மான்செஸ்டர் யுனைடெட் அணி வீரர் அலெஜாண்ட்ரா கர்னாசோ அந்தரத்தில் பறந்தபடி அடித்த பைசைக்கிள் கிக் கோல் இணையத்தில் வைரலாகியுள்ளது.
Goodison Park மைதானத்தில் பிரீமியர் லீக் தொடரின் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் (manchester united) மற்றும் எவெர்டன் (everton) அணிகள் மோதின.
ஆட்டத்தின் 3வது நிமிடத்தில் மான்செஸ்டர் வீரர் அலெஜாண்ட்ரா கர்னாசோ (Alejandro Garnacho) காற்றில் பறந்து Bicycle Kick ஷாட்டில் கோல் அடித்தார்.
இந்த கோலைப் பார்த்து மைதானமே ஆர்ப்பரித்தது. அதனைத் தொடர்ந்து கோல் அடிக்க எவெர்டன் அணி வீரர்கள் கடுமையாக போராடினர்.
ஆனால் மான்செஸ்டரின் அரணை தாண்டி அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முதல் பாதியில் மான்செஸ்டர் யுனைடெட் 1-0 என முதல் பாதியில் முன்னிலை வகித்தது.
அதனைத் தொடர்ந்து இரண்டாம் பாதியின் 56வது நிமிடத்தில் மான்செஸ்டர் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. நட்சத்திர வீரர் மார்கஸ் ராஷ்போர்டு (Marcus Rashford) அதனை சரியாகப் பயன்படுத்தி கோல் அடித்தார்.
REUTERS/Jason Cairnduff
பின்னர் ஆட்டத்தின் 75வது நிமிடத்தில் மான்செஸ்டரின் அந்தோணி மார்ஷியல் (Anthony Martial) கோல் அடித்தார். இதன்மூலம் மான்செஸ்டர் யுனைடெட் 3-0 என்ற கோல் கணக்கில் எவெர்டானை வீழ்த்தியது.
இதற்கிடையில் அலெஜாண்ட்ரா கர்னாசோ அடித்த Bicycle Kick கோல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரொனால்டோவைப் போல் அவர் கோல் அடித்ததாக ரசிகர்கள் பலரும் அவரை கொண்டாடி வருகின்றனர்.
REUTERS/Jason Cairnduff
Twitter (@TeamCRonaldo)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |