முதல்முறையாக கனடாவின் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்ட இலங்கை தமிழர்
கனடாவின் நீதி அமைச்சராக யாழ்ப்பாணத்தில் பிறந்த கரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார்.
கரி ஆனந்தசங்கரி
கனடாவின் 24 ஆவது பிரதமராக மார்க் கார்னி நேற்று பதவியேற்றார். அதனை தொடர்ந்து, கனடாவின் அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில், யாழ்ப்பாணத்தில் பிறந்த கரி ஆனந்தசங்கரி(Gary Anandasangaree) கனடாவின் நீதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
இதன் மூலம் இந்தப் பதவியை வகிக்கும் முதல் தமிழ்-கனடியர் என்ற பெருமையைப் பெறுவார்.
நீதி அமைச்சர்
கரி ஆனந்தசங்கரி, இலங்கை தமிழ் அரசியல்வாதியான, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரியின் இளைய மகன் ஆவார்.
தனது 13 வயதிலே கனடாவிற்கு புலம்பெயர்ந்து சென்ற அவர், அங்கு தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் வன்முறைகளை தீர்த்து வைக்கும் வகையில், இளைஞர்கள் சேவை நிலையமொன்றை தொடங்கினார்.
Honoured to serve as Minister of Justice and Attorney General, while continuing the work at Crown-Indigenous Relations and Northern Affairs.
— Gary Anandasangaree (@gary_srp) March 14, 2025
We will protect the Charter, uphold the rule of law, and stay true to Canadian values. Ready to get to work with PM @MarkJCarney. pic.twitter.com/jbfkcGfSaj
அரசியலுக்கு வரும் முன் வழக்கறிஞராக பணியாற்றிய இவர், அங்குள்ள கனடிய தமிழர் வர்த்தக சபை, கனடிய தமிழ் காங்கிரஸ் மற்றும் கனடிய தமிழ் இளைஞர் மேம்பாட்டு மையம் உள்ளிட்ட பல அமைப்புகளுடன் பணியாற்றியுள்ளார்.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில், ஒன்டாரியோ மாகாணத்தின் ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் இரண்டாவது முறையாக கரி ஆனந்தசங்கரி லிபரல் கட்சியின்சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
முன்னதாக, கனடாவின் நீதி அமைச்சர் மற்றும் அட்டர்னி ஜெனரலின் நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டவர், தற்போது கனடாவின் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |