பிரித்தானியா ஆதிக்கத்திலிருந்து விலகி குடியரசாக மாறிய நாடு! வாழ்த்து தெரிவித்த கனேடிய இலங்கை தமிழ் பிரபலம்
ஒரு புதிய குடியரசாக பார்படாஸ் நாடு மாறியுள்ள நிலையில் அந்நாட்டு மக்களுக்கு கனேடிய இலங்கை தமிழ் பிரபலமான Gary Anandasangaree வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த 400 வருடமாக இங்கிலாந்து ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்த பார்படாஸ் தன்னை தனி குடியரசு நாடாக பிரகடனம் செய்துள்ளது. மேலும் இதுவரை இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தை நாட்டின் தலைவராக கொண்டிருந்த அந்த தீவு நாடு தற்போது புதிய அதிபரையும் தேர்வு செய்துள்ளது.
இந்த நிலையில் அந்நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரும், நீதித்துறை அமைச்சர் மற்றும் தலைமை சட்டத்தரணிக்கு நாடாளுமன்ற செயலாளராக இருப்பவருமான இலங்கை தமிழர் Gary Anandasangaree.
இது குறித்த அவரின் டுவிட்டர் பதிவில், பார்படாஸ் நாடு குடியரசாக மாறியதற்கு அந்நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்கள்.
பார்படாஸ் உயர் ஆணையர் மாண்புமிகு க்லைன் ஆர்லி கிளார்க்கை சந்தித்து வாழ்த்துவதில் மகிழ்ச்சி என பதிவிட்டுள்லார்.
Sending big congratulations to the people of Barbados on becoming a republic! It was a pleasure to meet and congratulate His Excellency Gline Arley Clarke, the High Commissioner for Barbados?? pic.twitter.com/WQkcjuaf2O
— Gary Anandasangaree (@gary_srp) December 8, 2021