கனடா தேர்தல்! இலங்கை தமிழர் அதிக வாக்கு வித்தியாசத்தில் இமாலய வெற்றி
கனடிய தேர்தலில் போட்டியிட்ட இலங்கை தமிழரான Gary Anandasangaree அபார வெற்றி பெற்றிருக்கிறார்.
கனடிய பொது தேர்தலில் லிபரல் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றுகிறது. இதன்மூலம் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் பிரதமராகிறார்.
இந்த நிலையில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கை தமிழரான Gary Anandasangaree 16051 வாக்குவள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அவர் மொத்தமாக 23,901 வாக்குகளை பெற்றுள்ள நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் Zia Choudhary 8059 வாக்குகளை பெற்று தோல்விடைந்தார்.
Scarborough—Rouge Park தொகுதியில் இருந்து Gary Anandasangaree வெற்றி பெற்றுள்ளார்.
Gary Anandasangaree பிரபல அரசியல்வாதி Veerasingham Anandasangareeன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.