அவர் வியூகத்தின் அடிப்படையில் சிறந்த பயிற்சியாளர்! கேரி கிரிஸ்டன்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஆஷிஷ் நெஹ்ரா ஐபிஎல் தொடர்களில் சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவர் என தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் ஜாம்பவான் வீரர் கேரி கிரிஸ்டன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் சீசனில் கேரி கிரிஸ்டன் குஜராத் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராகவும், ஆலோசகராகவும் செயல்பட்டார். இவர் தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் ஆவார். அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா பணியாற்றினார்.
இவர்களது பயிற்சியில் தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட குஜராத் அணி, இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இந்த நிலையில் ஆஷிஷ் நெஹ்ராவை வெகுவாக புகழ்ந்துள்ளார் கேரி கிறிஸ்டன்.
Photo Credit: IPL/BCCI
அவர் நெஹ்ரா குறித்து கூறுகையில், 'ஆஷிஷ் ஒரு நெருங்கிய நண்பர். நாங்கள் ஒன்றாக நீண்ட பயணம் செய்துள்ளோம். அவர் தொழில்முறையையும், விளையாட்டையும் தொடர்ந்து விருப்பத்துடன் புரிந்துகொள்வதை கண்டு ஒரு வீரராக நான் மகிழ்ச்சியடைந்தேன்' என தெரிவித்துள்ளார்.
மேலும், நெஹ்ராவின் பயிற்சி முறை பற்றி அவர் கூறுகையில், 'அவர் தனது வீரர்களைப் பற்றி எப்போதும் சிந்தித்து, அவர்களுக்கு எப்படி உதவ முடியும் என்பதை தனது மனதில் வைத்து பயிற்சியளிக்கிறார்.
Photo Credit: IPL
அவர் வியூக ரீதியில் ஐபிஎல்லில் சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவராக இருக்கிறார். மேலும் சிறப்பாக விளையாடுவது எப்படி என்பது பற்றி எப்போதும் தனது வீரர்களுடன் பேசிக் கொண்டிருப்பார். ஆஷிஷ் தனது வீரர்களுக்கு விருப்பத்தேர்வுகள் இருக்க வேண்டும், அவற்றை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறார்' என தெரிவித்துள்ளார்.
Photo Credit: AFP