இந்தியாவை வீழ்த்திய எங்களின் திட்டம் இதுதான்! மிரட்டலான வியூகம் குறித்த ரகசியத்தை உடைத்த நியூசிலாந்து பயிற்சியாளர்
டி20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்திய நிலையில் அதன் பின்னணி பிளான் குறித்த ரகசியத்தை அந்த அணியின் பயிற்சியாளர் உடைத்துள்ளார்.
துபாயில் நடந்து முடிந்த முக்கிய போட்டியில் இந்திய அணியை புரட்டி எடுத்து வெற்றி பெற்றது நியூசிலாந்து.
இந்த வெற்றி குறித்து நியூசிலாந்து தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் மனம் திறந்துள்ளார். அவர் கூறுகையில், இந்தியா போன்ற தரமான வீரர்கள் நிறைந்த அணியை 110 ரன்களுக்கு கட்டுப்படுத்துவது உண்மையில் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
திட்டமிட்டு யார் யார் எப்போது பந்து வீச வேண்டும்? எந்த இடத்தில் பந்து வீச வேண்டும்? என்பதை செயல்படுத்தினோம் அது நடந்து விட்டது. எங்கள் அணியின் பேட்டிங் உண்மையில் மகத்துவமானது.
ஸ்காட்லாந்து, நமீபியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இதே உத்வேகத்தை தொடர வேண்டும். வெற்றி பெறாத அணி அரையிறுதிக்கு செல்வது மிகவும் கடினமாக இருக்கும் என்பது எங்களுக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.