ஜேர்மனியில் உலகின் மிகப்பெரிய நிறுவனமொன்றில் இருவர் உயிரிழப்பு! விசாரணை தீவிரம்
ஜேர்மனியில் கார் பாகங்கள் தயாரிப்பு நிறுவனயொன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
எரிவாயு சிலிண்டர்
Bosch நிறுவனம் உலகின் மிகப்பெரிய கார் பாகங்களை தாயரிக்கும் நிறுவனமாகும்.
ஜேர்மனியின் தென்மேற்கு நகரமான Reutlingenயில் அமைந்துள்ள Bosch நிறுவனத்தின் வளாகத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்துள்ளது.
இதில் ஒரு ஒப்பந்ததாரரின் இரண்டு ஊழியர்கள் உயிரிழந்ததாகவும், ஒருவர் லேசான காயத்துடன் உயிர் தப்பியதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கசிவுக்கான காரணம்
செவ்வாய்க்கிழமை 7 மணியளவில் ஒரு எரிவாயு சிலிண்டர் வெளியில் சிலேன் எரிவாயு கசிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், நிறுவனம் கசிவுக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக கூறியுள்ளது.
இதற்கிடையில், செய்தித் தொடர்பாளர் ஒருவர் ஊடகத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில்,
"வெளிப்புற நிறுவனத்தின் இரண்டு ஊழியர்களின் மரணத்தால் நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம். எங்கள் எண்ணங்கள் அவர்களின் குடும்பத்தினருடன் உள்ளன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |