கனடாவில் எரிபொருள் விலை குறித்து வெளியாகியுள்ள ஒரு முக்கிய தகவல்
கனடா முழுவதுமே, இந்த வார இறுதியில், வாகனங்களுக்கு பயன்படுத்தும் எரிபொருளின் விலை குறையலாம் என அத்துறை சார் பகுப்பாய்வு வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளியன்று கச்சா எண்ணெயின் விலை குறைந்ததையடுத்து, கனடாவின் பெரும்பாலான பகுதிகளில் எரிபொருளின் விலை குறைந்தபட்சம் லிற்றருக்கு 10 சென்ட்கள் வரை குறையலாம் என, Canadians for Affordable Energy என்ற அமைப்பின் தலைவரும், அத்துறை சார் பகுப்பாய்வு வல்லுநருமான Dan McTeague என்பவர் தெரிவித்துள்ளார்.
அந்தந்த மாகாணத்தின் வரி அமைப்பைப் பொருத்து, லிற்றர் ஒன்றுக்கு 10 முதல் 11 சென்ட்கள் வரை எரிபொருள் விலை குறையலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதுமே இந்த விலை குறைவை எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ள Dan McTeague, Atlantic Canada மாகாணங்களுக்கு மட்டும் தற்போது விதிவிலக்கு என்றும், அவர்கள் அடுத்த வாரம் வரை காத்திருக்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
This is A GO - ALL CANADA except Atlantic (because price regulations)
— Dan McTeague (@GasPriceWizard) November 26, 2021
⬇️⬇️⬇️ https://t.co/w7K0xFYVCX
புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று பரவத்தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து உலகச் சந்தைகளில் உருவாகியுள்ள அச்சத்தால் பங்குகள் சரிந்ததையடுத்து கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளது.
ஆனால், இந்த விலை குறைவு நீண்ட நாட்கள் நீடிக்காது என தான் கருதுவதாக தெரிவிக்கிறார் McTeague.
அமெரிக்க எரிபொருள் வர்த்தகர்கள் திங்கட்கிழமை மீண்டும் பணிக்குத் திரும்பும் பட்சத்தில், புதன்கிழமை வாக்கில் மீண்டும் விலை உயர்ந்துவிடலாம் என தான் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவிக்கிறார்.
ஆகவே, இப்போதே இந்த விலை குறைவைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்கிறார் அவர்.