மர்மமாக இறந்து கிடந்த பாடசாலை சிறுமி... லண்டன் விமான நிலையத்தில் தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி
பிரித்தானியாவில் சர்ரே பகுதி குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சிறுமி சாராவின் தந்தை உட்பட மூவரை லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் கைது செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
கேட்விக் விமான நிலையத்தில்
துபாயில் இருந்து குறித்த மூவரும் லண்டன் திரும்பிய நிலையிலேயே பொலிசார் கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். ஆகஸ்டு 10ம் திகதி சிறுமி சாராவின் சடலம் மீட்கப்படுவதன் ஒரு நாள் முன்பு, அவரது தந்தையும் சித்தியும் உட்பட மூவர் பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகருக்கு தப்பியுள்ளனர்.
Image:TikTok
இந்த நிலையில், சிறுமியின் உடற்கூறு ஆய்வில், பல மாதங்கள் அல்லது ஆண்டுகளாக சிறுமி துஸ்பிரயோகத்திற்கு அல்லது தாக்குதலுக்கு இலக்கானதாக கண்டறியப்பட்டது.
இதனிடையே, பாகிஸ்தானிலும், பொலிசார் தீவிர நடவடிக்கை முன்னெடுத்தனர். இந்த நிலையிலேயே துபாய் வழியாக சியால்கோட்டில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் புதன்கிழமை இரவு சுமார் 7.30 மணிக்குப் பிறகு மூவரும் கேட்விக் விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
விசாரணை முன்னெடுக்கப்படும்
துரிதமாக செயல்பட்ட பொலிசார், சிறுமி மரணம் தொடர்பில் விசாரிக்கும் பொருட்டு மூவரையும் உடனடியாக கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்த விவகாரம் தொடர்பில் சர்ரே பொலிசார் தெரிவிக்கையில்,
@socialmedia
41 வயது மற்றும் 28 வயதுடைய இரு ஆண்களும், 29 வயதுடைய பெண் ஒருவரும் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். மூவரும் தற்போது பொலிஸ் காவலில் உள்ளனர், அவர்களிடம் உரிய விசாரணை முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.
சிறுமி சாராவின் தாயாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு உதவும் வகையில் சிறப்பு அதிகாரிகள் உடனிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |