லண்டன் விமானத்தில் இளைஞரின் சடலம்: அதிகாரிகள் விடுத்த வேண்டுகோள்
லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஒன்றில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் தற்போது வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சசெக்ஸ் பொலிசாருக்கு தகவல்
கடந்த ஆண்டு டிசம்பர் 7ம் திகதி அதிகாலை 4 மணியளவில் லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தில் ஆணின் சடலம் ஒன்றை கண்டெடுத்ததாக சசெக்ஸ் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
குறித்த விமானமானது உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்கு காம்பியாவில் உள்ள பன்ஜூலில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்த நிலையில், தொடர்புடைய நபரின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள சசெக்ஸ் பொலிசார், அந்த நபரை அடையாளம் காணவும் அவரது உறவினர்களுக்கு தெரியப்படுத்தவும் நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர்.
Image: Sussex Police
மேலும், காம்பியா தூதரக அதிகாரிகளுடனும் இந்த விவகாரம் தொடர்பில் இணைந்து செயல்படுவதாக தெரிவித்துள்ளனர். இது ஒரு துயரமான சம்பவம். சடலமாக மீட்கப்பட்டுள்ள நபருக்கு 20ல் இருந்து 30 வயதிருக்கலாம் எனவும், காம்பியா அதிகாரிகளுடன் தரவுகளை பகிர்ந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த நபருக்கு என்ன ஆனது என்பது தெரியாமல் அவரது உறவினர்களும் குடும்பத்தினரும் பரிதவிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மிக விரைவில் அந்த இளைஞரை அடையாளம் காண முடியும் என நம்புவதாகவும் அதிகாரிகள் தரப்பு நம்புக்கை தெரிவித்துள்ளனர்.