ஒரேயொரு காரணம்... ரூ 10,000 கோடியை நன்கொடையாக ஒதுக்கிய கௌதம் அதானி
நாடு முழுவதும் குறைந்தது 20 பாடசாலைகளைக் கட்டுவதற்காக கெளதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் ரூ.2,000 கோடி நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளது.
ரூ.10,000 கோடி நன்கொடை
கெளதம் அதானியின் இளைய மகன் ஜீத் அதானி மற்றும் திவா ஷா திருமணத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட ரூ.10,000 கோடி நன்கொடை அளிக்க இருப்பதாக அதானி குழுமம் அறிவித்ததை அடுத்து தற்போது அதன் விவரங்களை குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
அதானி குழுமம் ஏற்கனவே மருத்துவமனைகளைக் கட்டுவதற்கு ரூ.6,000 கோடியும், திறன் மேம்பாட்டிற்கு ரூ.2,000 கோடியும் ஒதுக்கியுள்ளதாக அறிவித்திருந்தது.
ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 53.9 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானிக்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது பணக்காரராக அதானி அறியப்படுகிறார்.
நாடு முழுவதும்
தற்போது மகனின் திருமணத்தை முன்னிட்டு, GEMS கல்வி குழுமத்துடன் இணைந்து நாடு முழுவதும் 20 பாடசாலைகளை நிறுவ அதானி குழுமம் முடிவெடுத்துள்ளது.
முதற்கட்டமாக ரூ 2,000 கோடி தொகையை அதானி குழுமம் ஒதுக்கியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், அதானி தனது இளைய மகன் ஜீத் அதானி திருமணத்தின்போது, சமூக நோக்கங்களுக்காக ரூ.10,000 கோடி செலவிடுவதாக உறுதியளித்தார்.
இதனடிப்படையில் அதானி GEMS பாடசாலை ஒன்று லக்னோவில் 2025-26 கல்வி ஆண்டில் திறக்கப்பட உள்ளது. அடுத்த மூன்றாண்டுகளில் நாடு முழுவதும் முதன்மையான நகரங்களில் மொத்தம் 20 பாடசாலைகளை திறக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |