இவள் கண்களுக்கு முன் என் சொத்துக்கள் ஒன்றுமில்லை., பேத்தியை தூக்கிக்கொஞ்சும் கோடீஸ்வரர் அதானி
அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி தனது குடும்ப விஷயங்களைப் பற்றி பொதுவாக மனம் திறந்து பேசுவதில்லை.
இருப்பினும், இன்று (செவ்வாயக்கிழமை) சமூக ஊடகங்களில் ஒரு பதிவைப் பகிர்ந்த கௌதம் அதானி, தனது பேத்தியைப் பற்றி பேசினார்.
உலகில் எந்தச் செல்வங்கள் இருந்தாலும், அவை என் பேரக்குழந்தைகளின் கண்களின் பிரகாசத்தின் முன் எதுவும் இல்லை என்று எழுதப்பட்டுள்ளன.
இதை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள கவுதம் அதானி, தனது மகன் கரண் அதானி மற்றும் அவரது மனைவி பரிதியின் மூன்றாவது மகள் 14 மாத குழந்தையான காவேரியை தூக்கிக் கொண்டும் புகைப்படத்துடன் இந்த அறிக்கையை வெளியிட்டார்.
அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, லண்டன் அறிவியல் அருங்காட்சியகத்தில் உள்ள புதிய அதானி கிரீன் எனர்ஜி கேலரியில் எடுக்கப்பட்ட தனது பேத்தியின் படத்தைப் பகிர்ந்துகொண்டு, "இந்த கண்களின் பிரகாசத்துடன் ஒப்பிடும்போது, உலகில் உள்ள அனைத்து செல்வங்களும் ஒன்றுமில்லை" என்று பதிவிட்டார்.
மேலும் "எனது மூன்று பேரக்குழந்தைகளும் மன அழுத்தத்தை போக்க வல்லவர்கள். அவர்களுடன் நேரம் செலவழித்தால் எனது மன அழுத்தம் அனைத்தும் நீங்கும்''என்றார்.
इन आँखों की चमक के आगे दुनिया की सारी दौलत फीकी है। ? pic.twitter.com/yd4nyAjDkR
— Gautam Adani (@gautam_adani) April 2, 2024
பேத்திகளுடன் நேரத்தை செலவிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்கள் என்னுடைய மிகப்பாரிய மன அழுத்தத்தை நீக்குபவர்கள். எனக்கு வேலை மற்றும் குடும்பம் என இரண்டு உலகங்கள் உள்ளன: அதில் குடும்பம்தான் எனக்கு பலம்'' என்றார் கௌதம் அதானி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Gautam Adani, Gautam Adani Family, Gautam Adani GrandDaughter