மீண்டும் சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பிய அதானி., அம்பானியை பின்னுக்கு தள்ளி முதலிடம்
அதல பாதாளத்தில் விழுந்து மீண்டும் சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பிய அதானி, அம்பானியை பின்னுக்கு தள்ளி ஆசியாவின் பணக்கார கிரீடத்தை சூடிக்கொண்டார்.
தொழிலதிபர் கௌதம் அதானி (Gautam Adani) கடந்த ஓராண்டில் கடும் விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும், நஷ்டத்தையும் சந்தித்துள்ளார்.
ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பிறகு, இந்தியாவில் ஒரு கொந்தளிப்பு ஏற்பட்டது. அதானி பங்குகள் அதளபாதாளத்தில் சரிந்தன. அவருக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
ஆனால் அமைதியாக தனது சாம்ராஜ்யத்தை மீண்டும் கட்டியெழுப்பிய கெளதம் அதானி, தற்போது ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் நம்பர் 1 இந்தியராக ஆகியுள்ளார்.
ஆசியாவின் மிகப் பாரிய பணக்காரராக ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானியை (Mukesh Ambani,) பின்னுக்குத் தள்ளி அதானி முதலிடம் பிடித்துள்ளார்.
Bloomberg வெளியிட்ட ஆசியாவின் பணக்காரர்களின் அறிக்கையில் கவுதம் அதானி முதலிடத்தை பிடித்துள்ள நிலையில், முகேஷ் அம்பானி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
அதானியின் சொத்து மதிப்பு 111 பில்லியன் அமெரிக்க டொலர்கள், அம்பானியின் நிகர மதிப்பு 109 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என Bloomberg Billionaires Index தெரிவிக்கிறது.
கௌதம் அதானி ஏற்கனவே தனது வணிக சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்துவதில் அதிக முதலீடு செய்துள்ளார். இதன் லாபமும் பலனும் இன்னும் சில ஆண்டுகளில் அதானி குழும நிறுவனங்களுக்கே சென்று சேரும் என நிபுணர்கள் அலசியுள்ளனர்.
ஏனெனில் குறுகிய காலத்திற்குள் அதானி நிறுவனங்கள் மொத்தம் 90 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளன.
2023-ல் அதானி கடும் நெருக்கடியில் இருந்தார். ஹிண்டன்பர்க் அறிக்கை அதானி வணிக சாம்ராஜ்யத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. 2023-இல், உச்ச நீதிமன்றம் ஹிண்டன்பர்க் அறிக்கையை விசாரிக்க உத்தரவிட்டது.
ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு முன், அதானி உலகின் 3வது பணக்காரர். ஆனால் இந்த அறிக்கைக்குப் பிறகு, அதானியின் பங்குகள் கீழே விழுந்தன. பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதனால் அதானி பணக்காரர்கள் பட்டியலில் இருந்து கீழே தள்ளப்பட்டார்.
பங்குச் சந்தை மற்றும் தொழில்துறையில் அதானி மோசடி வருமானம் ஈட்டுவதாக அமெரிக்க ஹிண்டன்பர்க் அமைப்பு குற்றம் சாட்டியிருந்தது. இதை பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான 'SEBI' ஆய்வு செய்தது.
உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் விசாரணை நடத்திய செபி, ஹிண்டன்பர்க் குழுவின் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று கூறியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Gautam Adani, Mukesh Ambani, Asias Richest man gautamAdani, Bloomberg Billionaires Index