Adani Groups நிர்வாகத்தில் பெரும் மாற்றம்., கவுதம் அதானியின் மகன் கரண் அதானிக்கு முக்கிய பொறுப்பு
அதானி குழும நிறுவனமான Adani Ports And Special Economic Zone Ltd (APSEZ) நிர்வாகத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
Gautam Adaniயின் மகன் கரண் அதானிக்கு (Karan Adani) பாரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கரண் அதானி நிறுவனத்தின் M.D. அதாவது நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அவர் அதானி போர்ட்டில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) பணிபுரிந்தார்.
இதுவரை அந்த நிறுவனத்தின் எம்.டி.யாக பதவி வகித்து வந்த கெளதம் அதானி, தற்போது அவர் நிறுவனத்தின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், கரண் அதானிக்கு பதிலாக Nissan Motors-ன் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி Ashwani Gupta தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை அந்நிறுவனம் இன்று பங்குச் சந்தைக்கு தெரிவித்துள்ளது.
இதன் மூலம், அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல லிமிடெட் (APSEZ) இயக்குநர்கள் குழு, மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் (NCDs) மூலம் 5,000 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட ஒப்புதல் அளித்துள்ளது.
Adani Groups நிர்வாகக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு
நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல லிமிடெட் வாரியம் இன்று ஜனவரி 3, 2024 அன்று ஒரு கூட்டத்தை நடத்தியது. இக்கூட்டத்தில், 5000 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் குஜராத்தில் உள்ள அதன் மிகப்பாரிய கொள்கலன் கையாளும் துறைமுகமான முந்த்ரா உட்பட. இந்தியாவில் 13 துறைமுகங்கள் மற்றும் முனையங்களை இயக்குகிறது.
அதானி குழும நிறுவனங்கள் மூலதனச் செலவினங்களுக்காக நிதி திரட்டத் தொடங்கி, அடுத்த பத்தாண்டுகளில் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக ரூ.7 Trillion செலவழிக்கத் திட்டமிட்டுள்ளன.
அதானி பங்குகள் ஏற்றம்
அதானி-Hindenburg Research வழக்கு விசாரணையில் SEBI தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. வழக்கை SITக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்தது.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால், அதானி குழுமத்தின் பங்குகளில் இன்று அபரிதமான ஏற்றம் ஏற்பட்டது. அதானி குழுமத்தின் பங்குகள் 10 சதவீதம் உயர்ந்து குழுமத்தின் சந்தை மதிப்பு ரூ.15 லட்சம் கோடியை தாண்டியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Adani Ports And Special Economic Zone Ltd, Adani Ports, Adani Groups, Karan Adani, Gautam Adani Son Karan Adani, Adani shares price hike