உலகின் 3-வது மிகப்பெரிய பணக்காரர் ஆனார் கெளதம் அதானி! சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
கெளதம் அதானி இப்போது உலக பணக்கார்கள் பட்டியலில் 3-வது இடத்தை அடைந்துள்ளார்.
இதன்மூலம் டாப்-3 பட்டியலில் இடம் பிடித்த முதல் ஆசிய நபர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் அதானி.
சில ஆண்டுகளுக்கு முன்புதான் கௌதம் அதானியைப் பற்றி இந்தியாவுக்கு வெளியே சிலர் கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால் இப்போது, கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவரும், நிலக்கரிக்கு தொழிலுக்கு மாறுவதற்கு முன்பு வைர வியாபாரியாக தனது அதிர்ஷ்டத்தை சோதித்தவருமான, இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான கௌதம் அதானி, உலகின் மூன்றாவது பணக்காரர் ஆனார்.
Bloomberg Billionaires Index-ன் முதல் மூன்று இடங்களுக்குள் ஒரு ஆசிய நபர் நுழைவது இதுவே முதல் முறை. முகேஷ் அம்பானி மற்றும் சீனாவின் ஜாக் மா ஆகியோர் இதுவரை இந்த அளவிற்கு முன்னேறவில்லை.
137.4 பில்லியன் டொலர் (இந்திய அபான மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.10, 93,168 கோடி) சொத்து மதிப்புடன், கெளதம் அதானி பிரான்சின் பெர்னார்ட் அர்னால்ட்டை முந்தியுள்ளார். இப்போது தரவரிசையில் அமெரிக்காவின் எலோன் மஸ்க் மற்றும் ஜெஃப் பெசோஸ் ஆகியோருக்குப் பின் உள்ளார்.
60 வயதான அதானி, கடந்த சில ஆண்டுகளாக நிலக்கரி முதல் துறைமுகங்கள் வரையிலான கூட்டு நிறுவனத்தை விரிவுபடுத்தினார், தரவு மையங்கள் முதல் சிமென்ட், ஊடகம் மற்றும் அலுமினா வரை அனைத்திலும் ஈடுபட்டுள்ளார்.
குழுமம் இப்போது இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறைமுகம் மற்றும் விமான நிலைய ஆபரேட்டர், நகர-எரிவாயு விநியோகம் மற்றும் நிலக்கரி சுரங்கம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் உள்ள அதன் கார்மைக்கேல் சுரங்கம் சுற்றுச்சூழலாளர்களால் விமர்சிக்கப்பட்டாலும், நவம்பர் மாதம் 70 பில்லியன் டொலர்லர்களை பசுமை ஆற்றலில் முதலீடு செய்வதாக உறுதியளித்தது.
அதானி 2022-ஆம் ஆண்டில் மட்டும் 60.9 பில்லியன் டொலர்களை தனது செல்வத்தில் சேர்த்துள்ளார், இது மற்றவர்களை விட ஐந்து மடங்கு அதிகம். அவர் பிப்ரவரியில் ஆசிய பணக்காரராக அம்பானியை முதன்முதலில் முந்தினார், ஏப்ரலில் சென்டிபில்லியனர் ஆனார் மற்றும் கடந்த மாதம் உலகின் நான்காவது பணக்காரராக மைக்ரோசாப்ட் கார்ப் நிறுவனத்தின் பில் கேட்ஸை விஞ்சினார்.