என் வேலை லைக்ஸ் வாங்குவதல்ல: கௌதம் கம்பீர் விமர்சனங்களுக்கு பதிலடி
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி தடுமாறவில்லை என தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தடுமாறவில்லை; மாறாக ஒரு மாற்றுக் கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது என தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இரண்டு முறை தொடரை முழுமையாக இழந்த இந்திய அணி
கௌதம் கம்பீரின் பயிற்சியின் கீழ் சொந்த மண்ணில் இந்திய அணி இரண்டு முறை தொடரை முழுமையாக இழந்தது.
மேலும், முந்தைய சுழற்சியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவும் தவறியது. இது இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் மீது கடுமையான விமர்சனங்களை எழுப்பியது.
இந்த நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ள கம்பீர் (Gambhir), "விமர்சனங்களா? கிண்ணங்களை வெல்வதுதான் என் பணி; Views மற்றும் Likes பெறுவதல்ல. அதில் மட்டுமே நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்; அதுவே எனக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான வித்தியாசம்.
நாங்கள் பெரிய அளவில் தடுமாறவில்லை. தரவரிசைப் பட்டியல்கள் ஒரு பொருட்டல்ல. நாங்கள் ஒரு மாற்றுக் காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறோம் என்று நான் கருதுகிறேன். சரியான திசையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பது எங்களுக்குத் தெரியும்" என தெரிவித்துள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |