தோனியுடனான சண்டைக்கு என்ன காரணம்? - செய்தியாளர் சந்திப்பில் கடுப்பான கம்பீர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கும், தனக்கும் இடையேயான உரசல் குறித்து கவுதம் கம்பீர் மனம் திறந்து பேசியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் தொடக்க பேட்ஸ்மேன் கவுதம் கம்பீர் 2003 ஆம் ஆண்டும், முன்னாள் கேப்டன் தோனி 2004 ஆம் ஆண்டும் அறிமுகம் ஆனார்கள். ஆரம்பக்காலத்தில் இருவரும் சக வீரர்களாக இருந்த நிலையில் கம்பீருக்கு பிறகு அறிமுகமான தோனியின் கேப்டன்சியின் கீழ் கம்பீர் பல ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வந்தார்.
இதனிடையே கம்பீருக்கும் தோனிக்கும் ஆகாது என்றொரு பொதுவான பார்வை விமர்சகர்களிடையே உருவானது. அதற்கு காரணம் தோனியின் கேப்டன்சியை மட்டம் தட்டும் விதமாக கம்பீர் ஒவ்வொரு முறையும் கருத்து தெரிவித்து வந்தார். அதற்கு காரணம் தோனி, கம்பீரை இந்திய அணியை விட்டு நீக்கினார் என்ற ஒரு தகவல் தான்.
இந்நிலையில் தோனி மீது தான் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், கம்பீருக்கு தோனியை பிடிக்கவில்லை என்று கூறுவதெல்லாம் உகந்தது அல்ல. அந்த மரியாதை எப்போதும் நிலைத்திருக்கும். 138 கோடி மக்கள் முன்னிலையில் எங்கு வேண்டுமானாலும் இதை நான் சொல்ல முடியும். இது அவருக்கு ஒருபோதும் தேவை இல்லை என்று நான் நம்புகிறேன்.
தோனிக்கு புகழ்ந்து பேசுவது சுத்தமாக பிடிக்காது. அது எனக்கு நன்றாகு தெரியும். நீங்கள் கேட்கும் கேள்வியே ஒரு குப்பை என கம்பீர் பதிலளித்துள்ளார்.