என்னை அரசியலில் இருந்து விடுவியுங்கள்! முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் திடீர் விலகல்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் அரசியலில் இருந்து விலகி கிரிக்கெட்டில் கவனம் செலுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
கவுதம் கம்பீர்
டெல்லி கிழக்கு தொகுதியில் எம்.பி ஆக இருப்பவர் கவுதம் கம்பீர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான இவர் வெளியிட்டுள்ள பதிவு பாஜக கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கவுதம் கம்பீர் அரசியலில் இருந்து விலகி கிரிக்கெட்டில் கவனம் செலுத்த விரும்புகிறார். இதற்காக தன்னை அரசியல் பணியில் இருந்து விடுவிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அரசியல் பணியில் இருந்து விலகல்
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'கிரிக்கெட் பொறுப்புகளில் கவனம் செலுத்த உள்ளதால், அரசியல் பணியில் இருந்து என்னை விடுவிக்குமாறு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை கேட்டுக் கொள்கிறேன். மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு அளித்த பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கும் மனமார்ந்த நன்றி, ஜெய்ஹிந்த்!' என பதிவிட்டுள்ளார்.
I have requested Hon’ble Party President @JPNadda ji to relieve me of my political duties so that I can focus on my upcoming cricket commitments. I sincerely thank Hon’ble PM @narendramodi ji and Hon’ble HM @AmitShah ji for giving me the opportunity to serve the people. Jai Hind!
— Gautam Gambhir (@GautamGambhir) March 2, 2024
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக உள்ள கவுதம் கம்பீர், தனது IPL கேரியரில் 154 போட்டிகளில் 4,217 ஓட்டங்கள் குவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |