சர்ச்சையாகும் கவுதம் கம்பீரின் சைகை! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ
பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 1 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்று இருந்த நிலையில், லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீரின் சைகை சர்ச்சையாகியுள்ளது.
லக்னோ த்ரில் வெற்றி
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 212 அதிரடியாக குவித்தது.
இதையடுத்து 213 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி களமிறங்கியது. ஆனால் அந்த அணியின் முன்னணி வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் அடுத்தடுத்து வெளியேறி லக்னோ ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர்.
இருப்பினும் களத்தில் உறுதியுடன் நுழைந்த லக்னோ பேட்ஸ்மேன் நிகோலஸ் பூரன், 15 பந்தில் அரை சதம் கடந்தார். அவர் மொத்தமாக 19 பந்தில் 62 ஓட்டங்களில் அவுட்டானார்.
இதன் மூலம் லக்னோ அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
கம்பீரின் சைகை
கிட்டத்தட்ட போட்டியின் வெற்றி பெங்களூரு அணியின் கைகளுக்குள் சென்றுவிட்டு இருந்த நிலையில், நிகோலஸ் பூரன் அதிரடி போட்டியின் முடிவை முற்றிலும் மாற்றிவிட்டது.
Gautam Gambhir to the Chinnaswamy crowd after the match. ?#LSGvsRCB pic.twitter.com/cAwFo6pIf2
— Sohail. (@iamsohail__1) April 10, 2023
லக்னோ அணியின் வெற்றிக்கு பிறகு உற்சாகத்துடன் மைதானத்திற்குள் வந்த அந்த அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர், பெங்களூரு அணி ரசிகர்களை பார்த்து செய்த சைகை தற்போது சர்ச்சையாகி உள்ளது.
முன்னாள் இந்திய அணி வீரரான கவுதம் கம்பீர், கிழக்கு டெல்லி தொகுதியின் பாஜக எம்.பியாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.