இந்திய அணி பெற்ற வரம் தான் தோனி: முன்னாள் வீரர் புகழாரம்
இந்திய அணிக்காக பல விடயங்களை தோனி தியாகம் செய்துள்ளதாகவும் அவர் இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் எனவும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துக் கொண்டிருந்த கவுதம் கம்பீர் தோனி குறித்து பல விடயங்களைபேசியிருக்கிறார்.
அதில் அவர் கூறியதாவது, தோனி ஒரு போட்டியின் திசையை அப்படியே மாற்றக்கூடிய திறமை கொண்ட சிறந்த கிரிக்கெட் வீரர், கீப்பர், பேட்ஸ்மேன்.
அவரைப் போல பலம் கொண்ட ஒரு வீரர் பேட்டிங் வரிசையில் 7ஆவதாக பெற்றது இந்திய கிரிக்கெட் அணி பெற்ற மிகப் பெரிய வரம்.
மேலும், தோனியின் ஆரம்ப காலங்களை போலவே பேட்டிங்கில் 3ஆவதாக களமிறங்கியிருந்தால் இன்னும் பல சாதனைகளை கண்டிப்பாக அவர் முறியடித்திருப்பார்.
அணித்தலைவர் பொறுப்பை பெற்றதால் பேட்டிங் வரிசையில் 6ஆவது 7ஆவது இடத்தில் இறங்கி தனது பேட்டிங்கினை தியாகம் செய்திருக்கிறார் என கவுதம் கம்பீர் அந்த நிகழ்ச்சியில் தெரிவித்திருக்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |