தந்தையின் சொத்துக்களைப் பறித்து நடுத்தெருவுக்கு தள்ளிய பெரும் கோடீஸ்வரர்: பல நூறு கோடியை இழக்க வைத்த காதல்
ரேமண்ட் குழுமத்தின் தற்போதைய உரிமையாளரான Gautam Singhania வெளிநாட்டு வாகனங்கள் இறக்குமதி செய்த விவகாரத்தில் ரூ 328 கோடி அபராதம் செலுத்தியுள்ளார்.
ரேமண்ட் குழுமத்தின் தலைவர்
ரூ 11000 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்ட இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர் கவுதம் சிங்கானியா. ரேமண்ட் குழுமத்தின் தற்போதைய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக செயல்பட்டு வருகிறார்.
இந்தியாவின் பெரும் தொழிலதிபர்கள் வரிசையில் தொடர்ந்து இடம்பெற்று வருபவர் கவுதம் சிங்கானியா. இவர் ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்றவர். மட்டுமின்றி வெளிநாட்டு சொகுசு கார்கள் என்றால் இவருக்கு உயிர்.
பழங்காலத்து கார்களின் காதலன் இவர். இந்த காதலே தற்போது பெருந்தொகை அபராதமாக செலுத்த வைத்துள்ளது. உரிய வரி செலுத்தாமல் 142 சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்த விவகாரத்தில் கவுதம் சிங்கானியா ரூ 328 கோடி அபராதமாக செலுத்தியுள்ளார்.
கவுதம் சிங்கானியா இறக்குமதி செய்துள்ள 142 வாகனங்களில் 138 எண்ணிக்கை பழங்கால கார்கள் என்றே கூறப்படுகிறது. கார்களுக்கான அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்குவதே இவரது திட்டம் என்று கூறப்படுகிறது.
அவரை நடுத்தெருவுக்கு தள்ளியது
கவுதம் சிங்கானியாவின் தந்தை Vijaypat Singhania தான் ரேமண்ட் குழுமத்தை நிறுவியவர். ஆனால் அவர் செய்த ஒரு தவறான முடிவால், தற்போது வாடகை குடியிருப்பு ஒன்றில் மிகவும் சாதரண வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
தமது மகன் கவுதம் மீது நம்பிக்கை வைத்த அவர், மொத்த சொத்துக்களையும் அவர் பெயரில் மாற்றியுள்ளார். ஆனால் அந்த முடிவு, அவரை நடுத்தெருவுக்கு தள்ளியது. சொந்த குடியிருப்பில் இருந்தே Vijaypat Singhania துரத்தப்பட்டார்.
இறுதியில் மகனுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடும் மிக மோசமான நிலை உருவானது. இந்தியா முழுக்க பிரபலமான ரேமண்ட் குழுமத்தின் தற்போதைய சந்தை மதிப்பு என்பது ரூ 11,575.04 கோடி என்றே கூறப்படுகிறது.
ரேமண்ட் குழுமத்தின் தற்போதைய உரிமையாளர் கவுதம் சிங்கானியாவின் சொத்து மதிப்பு ரூ 11,658 கோடி எனவும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |