இனி இந்தியாவை வழிநடத்த சிறந்த வீரர் இவர் தான்! புதிய கேப்டனின் பெயரை வெளிப்படுத்திய கவாஸ்கர்
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேட்னாக பொறுப்பேற்க தகுதியானவர் என தான் கருதும் வீரரின் பெயரை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வெளிப்படுத்தியுள்ளார்.
நேற்று நமீபியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியோடு கோலி, இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிவிட்டார்.
புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறியதாவது, அடுத்த உலகக் கோப்பை போட்டிக்கு 2 முதல் 3 ஆண்டுகள் இருந்தால் நீண்ட கால கேப்டனை தேர்வு செய்யலாம், ஆனால் அடுத்த உலகக் கோப்பைக்கு 12 மாதங்களுக்கும் குறைவான நாட்களே இருக்கின்றன.
எனவே நீண்ட கால கேப்டன் தேவையில்லை. 2023 உலகக் கோப்பைக்கு நீண்ட கால கேப்டனை நியமிக்கலாம்.
ஆனால், தற்போது ஐசிசி உலகக் கோப்பைக்கு இந்தியாவை வழிநடத்த சிறந்த வீரரை தான் தேர்வு செய்ய வேண்டும், அது ரோகித் சர்மா தான் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் அவர் படைத்திருக்கும் சாதனைகளை பார்க்கும் போது, இந்திய டி20 அணியை கேப்டனாக வழி நடத்த அவர் தான் சரியான தேர்வாக இருக்கும்.
எனவே, அவருக்கு தான் கேப்டன்சி பொறுப்பு வழங்க வேண்டும், அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பை முடிந்த பிறகு மற்றொரு டி20 கேப்டனை தேர்வு செய்வது குறித்து யோசிக்கலாம்.
ஆனால், தற்போது ரோகித் சர்மா மட்டும் சரியான தேர்வாக இருக்கும் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.